Wednesday, November 21, 2012

பேஸ்புக் கவிதைகள் - 4

எவ்வளவோ  வேலைப் பளு இருந்தாலும் அவளின் நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால் வந்த கவிதைகள்.பேஸ் புக்கில் கிறுக்கியவை... 
தயக்கூட்டில்
லப்டப் லப்டப் என்ற
இன்னிசையாய்
இனியவள்
உன் பெயரே
இசைக்கப்படுகிறது..
ன் பார்வை
உன் பேச்சு
உன் சிரிப்பு
அனைத்தும்
நீ
இல்லாத நாட்களில்
உன்னை
ஞாகபப்படுத்துகிறது..
நிம்மதியற்று
இருக்கும்
நேரங்களில்
உன்
நினைவுகளே
மருந்தாய்...
தறி விட முடியாது
அவ்வளவு எளிதில்.
ஊன் வரை
ஊடுருவியுள்ள
உன் காதலை..
ன்னியவள்
குரல் கேட்டதும்
காத்திருந்த இதயம்
கனிந்து போனது
காதலால்.,
யுகம் யுகமாய்
கழிகிறது..
ஒவ்வொரு நாளும்..
உன்னைக் காணும் வரை..
மின்னலாய்
மங்கை உன் பார்வை
இடியாய் இறங்கியது
இதயத்தினுள்
காதல் எனும் மழையாய்..
 
 
 

  
வேதனையைத் தருகிறது
நீ இன்னமும்
வெளிக்காட்டாமல் இருக்கும்
எனக்கான காதலை....
றக்க முடியவில்லை
மனதில் பதிந்த
கல்வெட்டுக்களாய்.
மங்கை உன்
நினைவுகள்..
ன்னோடு பேசிய
வார்த்தைகள்
மவுனமே ஆனாலும்
புரிந்து கொண்டது
இதயம்
உன் மீது கொண்ட காதலை..
றக்கத்திலும்
விழித்துக்கொண்டு
இருக்கிறது
இனியவளின்
நினைவுகள்...
நீ
உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
உணர்கிறேன்
எனக்கான காதலை.


னக்குள்   இருக்கும்
கவிஞனின்  உறக்கம்
கலைத்த  பெருமை
உனக்கே  வாய்க்கட்டும்  ............நன்றி.....அவளுக்கு........

 கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
   
   

10 comments:

  1. சுகமான நினைவுகள் சொல்லிச்செல்கிற கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகான நினைவுகள் நண்பர் ஜீவா...

    ReplyDelete
  3. விமலன்//// நன்றி தங்களுக்கு....

    ReplyDelete
  4. மகேந்திரன்//// அதிகாலை நன்றி தங்களுக்கும்...

    ReplyDelete
  5. தென்றலாய் மனம் தடவிப் போகும்
    அருமையான கவிதை
    இப்படி ஒரு கவிதையாவது எழுதி விட வேண்டும்
    என மனம் ஆவல் கொள்கிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிமையான நினைவுகள்... வாழ்த்துக்கள்...

    அதிக நேரம் முகநூல் பக்கம் தானோ...?
    tm3

    ReplyDelete
  7. பீலிங்ஸ் உடன் எழுதிய கவிதை ரசிக்கவைக்கிறது எழுத்துக்களை.

    ReplyDelete
  8. கவிதை மிகவும் அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  9. // கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..//


    ஓகே.. ரைட்டு..

    ReplyDelete
  10. நினைவின் வருடல்கள் நித்தம் நித்தம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....