Tuesday, July 12, 2011

துயரமான சம்பவம் ...

என் கம்பெனில வேலை செய்யிற பையன் பேரு ஜித்து..வயசு 20 தான் ஆகிறது.உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவன்.நல்ல வேலைக்காரன்.பெய்ண்டிங் வேலை அவ்ளோ நல்லா பண்ணுவான்.
கடந்த ஞாயிறு( 10 .7 .2011 ) இரவு மொபைல் பேசி கொண்டே ரயில் ட்ராக்கை கடந்து இருக்கிறான்.கடந்தும் விட்டான்..அப்போது வந்த ரயிலை கவனிக்காது.... ஆனாலும் ஒதுங்க இடம் இல்லாததால் ரயில் பக்கவாட்டு பகுதி மோதி தலையில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டு வேலியோரம் கிடந்திருக்கிறான்.காலை தான் அவன் பிணமாக கிடப்பது அவனுடன் தங்கி இருந்த நண்பர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
உடனே என்னை தொடர்பு கொண்டனர்.நானும் அங்கு சென்ற போது, அவனை பிணமாய் பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.தமிழ் மொழி தெரியா விட்டாலும் என்னிடத்தில் எப்போதும் அன்பாய் ஹிந்தி யில் பேசுவான்.என் அனைத்து குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவன், இப்போது பிணமாய் பார்க்கவும்.அழுகை முட்டி கொண்டு வந்தது.சுருண்டு கிடந்தபடி... எறும்புகள் மொய்த்த படி...ரத்த காயங்களுடன் கிடந்தான்..பார்க்கவே பரிதாபமாய்......
மணி 10 ஆயிருந்தது.ரயில்வே துறையை சேர்ந்த கீமென் வந்து பார்த்த பின்பு தான் ரயில்வே போலீசாருக்கு இன்பார்ம் பண்ணுவாராம்.அவரும் வந்த பாடில்லை.என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. கோவை மாவட்ட புதிய கமிசனர் ஒரு எண் கொடுத்திருக்கிறார்.அதில் இன்பார்ம் பண்ணியவுடன் ஸ்குவாடு போலீசார் வந்து அவர்கள் என்குயரி செய்து பின் ரயில்வே போலீசாருக்கு இன்பார்ம் செய்தனர்.
ரயிலில் அடிபட்ட கேஸ் களை விசாரிக்க நமது காவல் துறைக்கு அதிகாரம் இல்லையாம்....அப்புறம் மணி 2 மணி ஆனது.இன்னமும் அவன் அப்பிடியே கிடந்தான்.பின்னர் தாமதமாய் வந்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது மணி 4 .போஸ்ட்மார்டம் பண்ண இப்போது முடியாது என்று சொல்லிவிட்டனர்.அப்புறம் இன்று காலை 9 .30 மணிக்கு போஸ்ட் மார்டம் செய்தனர்.அப்புறம் போலீஸ் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு 4 மணிக்கு பாடியை கொடுத்தனர்.
இப்போது தான் அடக்கம் பண்ணி விட்டு வந்தோம் .நினைவுகள் நீங்காமலே அவனையே சுத்தி கொண்டு இருக்கிறது.அவனின் முகம் இன்னும் பசுமையாய் இருக்கிறது.எங்கிருந்தோ வந்து.. மொழி தெரியாமல்,இங்கு பிழைப்பை தேடி கொண்டவனின் முடிவு மிகவும் சோகமானதாய் இருந்து விட்டது.அவனின் முகம் பார்க்காமல் அவனின் பெற்றோர் மனம் என்ன பாடு படுமோ ..?
அவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேரவே மூன்று நாட்கள் ஆகிவிடும்..அதுவரைக்கும் அவனது பாடியை வைக்க வேண்டாம், அங்கேயே அடக்கம் பண்ணிவிடும்படி சொல்லி விட்டனர்.கடைசி காலத்தில் கொள்ளி போட ஆள் இல்லாமல், அவனுக்கும் கொள்ளி வைக்க முடியாமல் அவர்களின் நிலையை நினைத்தாலே பதறுகிறது.அவனுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்..


சோகங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, July 8, 2011

மலைக்கோட்டை - திருச்சி

நம்ம விஷால் நடிச்ச படத்தோட விமர்சனம், இந்த படம் எப்போவோ ரிலீஸ் ஆச்சே..இப்போ போய் பதிவா அப்படின்னு நினைச்சி விடாதீங்க ..திருச்சி யில் உள்ள மலைக்கோட்டை...எப்பவும் பரபர காணப்படும் பர்மா பஜார் இங்குதான் உள்ளது.பெண்கள் குறிப்பா கல்லூரி மங்கைகளின் வேடந்தாங்கலாக இந்த பர்மா பஜார் இருக்கிறது.அவர்களுக்கு தேவையான வளையல் , தோடு , ஹேர் கிளிப் இது மாதிரி லேட்டஸ்ட் பொருட்கள் அனைத்தும் குவிந்து கிடக்கின்றன.(சும்மா கிடைக்காது ..விலைக்குத்தான் )அலைமோதும் கூட்டம், பரபரப்பான விற்பனை என களை கட்டுகிறது.அப்புறம் இந்தியாவிலேயே மிக பெரிய ஜவுளி மாளிகை என சொல்லப்படுகின்ற சாரதா சில்க்ஸ் இங்கு தான் உள்ளது.மலைகோட்டை அடிவாரத்தில் மிகவும் விஸ்தாரமாய் அமைந்துள்ளது.வெளிநாட்டு பொருட்கள் அனைத்தும் இந்த பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.அருகிலேயே தெப்பக்குளம் இருக்கிறது.சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மற்றும் புகழ் வாய்ந்த சர்ச் ஒன்றும் உள்ளது.


இன்னும் கொஞ்சம்...

Sunday, July 3, 2011

கோவை மெஸ் - மைக்கேல் அண்ட் சன்ஸ் - ஐஸ் க்ரீம் கடை - திருச்சி

 மைக்கேல் அண்ட் சன்ஸ் - நாவிற்கு இனிய ஐஸ் க்ரீம்
திருச்சி மாநகரின் மலைக்கோட்டை நுழை வாயிலின் எதிரே அமைந்துள்ள ஒரு ஐஸ்கிரீம் கடை.ஆனால் மிகவும் பாரம்பரியம் மிக்க கடை.30 வருடங்களுக்கு மேல் நடை பெற்று கொண்டு வரும் கடை..மிகவும் சுவையுடன் இங்கு அனைத்து வகை ஐஸ் கிரீம் களும் கிடைக்கும்.விலை மிகவும் குறைவு.இந்த கடையில் புருட் சாலட் ஐஸ் கிரீம் மிகவும் பேமஸ்.எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.



நான் 1995 திருச்சி யில் படிக்கும் போது ஐஸ் கிரீம் விலை 2 .50 இப்போ 6 .00 .மிகவும் குறைந்த விலை.தரமோ அதிகம்.சொந்த தயாரிப்பில் இவர்கள் இந்த விலையில் தருகின்றனர்.வேறு எந்த பிராண்ட் வகைகளும் இவர்களிடத்தில் இல்லை..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

கிராமத்து நினைவுகள் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR)

(THIRUMUKKUDALUR)
அப்புறம்...திருமுக்கூடலூர்.... இந்த ஊர் என்னோட பிறந்த ஊர்.என் பெற்றோர்கள் இங்குதான் உள்ளனர்.கோவை நகர பரபரப்புலிருந்து விடுபட இங்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம்.சுத்தமான காற்று, அமைதியான சூழ்நிலை, வாகன நெரிசல் அற்ற, மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.அப்புறம் எங்களுக்கென்று ஒரு தோட்டம் உள்ளது.அதில் தென்னை, நெல் மற்றும் கோரை உள்ளது.





தோட்டத்தில் உள்ள மோட்டாரில் ரொம்ப நேரம் குளித்து விட்டு ஒரு இளநீர் சாப்பிட்டால் அந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.கயிற்று கட்டிலில் படுத்தால் உடனே உறக்கம் வரும்..அந்த அளவுக்கு அமைதி....கொடுத்து வைத்தவர்கள் இந்த கிராமத்து மக்கள்.சிறு வயது ஞாபகங்களை கிள்ளி பார்க்கின்ற கிராமத்து நினைவுகள்.ஆற்றில் குளித்தும் , மீன் பிடித்தும் விளையாண்ட கணங்கள் இப்போதும் இனிக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

மூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR)

திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR
இந்த ஊர் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் அமைந்த ஒரு கிராமம்.பச்சை பசும் வயல்கள் கொண்ட ஒரு கிராமம்.இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உள்ளது.மூன்று ஆறுகள் கூடும் இடம் ஆதலால் இந்த பெயர் காரணம்.அகண்டு விரிந்த காவிரி, அமராவதி மற்றும் அமராவதி ஆறிலிருந்து பிரிந்து ஒரு சில கிராமங்களை அடைந்து பின் வந்து இந்த இடத்தில கலக்கும் ஒரு சின்ன முத்துமணி ஆறு, இந்த மூன்று நதிகளும் கூடும் இடம் இந்த ஊர்தான்.




இங்கு ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய ஒரு புராதன ஈஸ்வரன் கோவில் உள்ளது.அகஸ்தீஸ்வரர் கோவில்.1978 இல் வந்த கடும் வெள்ளத்தில் இந்த கோவில் இப்போது சிதில மடைந்து உள்ளது.மேலும் கரூர் ஈஸ்வரன் கோவில், தஞ்சை பெரிய கோவில், மற்றும் இக்கோயில் அனைத்தும் ஒரே கால கட்டத்தில் கட்டப்பட்டதாம்.இந்த கோவிலில் சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது.இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் டெக்ஸ்டைல் பணியில் உள்ளனர்.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த கூடு துறையில் வெளியூர் மக்கள் வந்து குவிவார்கள்.ஆடி மாதம் புதுமண தம்பதிகளின் வருகை அதிகமாக இருக்கும்.இந்த ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சதாசிவ பிரம்மேந்திரள் கோவில் உள்ளது.இங்கும் அதிக மக்கள் வருவார்கள்.கரூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. 4 ம் நம்பர் பஸ் இந்த ஊருக்கு செல்லும் பேருந்து.
ஆற்று மணல் வெளியில் ஒருவகை செடி உள்ளது.இது பார்க்க குதிரை கால் குளம்பு போலவே இருக்கும்.அறிவியல் பெயர் காரணம் தெரியாது.ஆனால் குதிரை குளம்பு செடி என்று வட்டார மொழியில் சொல்லுவர்.
 



நேசங்களுடன் 
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, June 27, 2011

கோவை மெஸ் - ஸ்ரீ அன்ன பூர்ணா ஹோட்டல். - அவினாசி லிங்கம் கிளை, கோவை

கோவை மாநகரின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம்.



இந்த ஹோட்டலில் மக்கள் எப்போதும் குவிகிறார்கள்.விலையும் அதிகம், சுவையும் அதிகம்.இங்கு ரோஸ் மில்க் மிகவும் சசுவையாய் இருக்கும்.




அப்புறம் இந்த ஹோட்டல் ஏகப்பட்ட கிளைகளை கோவையில் கொண்டுள்ளது.பசிக்கு சாப்பிட செல்பவர்களுக்கு உடனடியாக இங்கு உணவு கிடைக்காது.கொஞ்ச நேரம் ஆகும்.தாமதமாக தான் ஆர்டர் எடுக்க வருகிறார்கள்.இந்த ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு தாமதம் தெரியாது.நாங்கள் சாப்பிட வந்த போது எங்கள் டேபிளில் மற்றும் பக்கத்துக்கு டேபிளில் கூட தண்ணீர் வைக்க வில்லை.வாடிக்கையாளர் சேவை கொஞ்சம் தேவை.புதியதாய் கார் பார்க்கிங் வசதி செய்து இருக்கிறார்கள்.இருந்தாலும் அவர்களின் ஹோட்டல் முன்பு எப்போதும் கார்களின் வரிசை அதிகமாக இருக்கும்.நாங்கள் சாப்பிட்ட கிளை வடகோவை அவினாசி லிங்கம் கல்லூரி அருகில்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

இன்னும் கொஞ்சம்...

Friday, June 24, 2011

கோவை மெஸ் - நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல், கோட்டை மேடு,, கோவை

நம்ம ஊருல மிகவும் பிரசித்தி பெற்ற இடம் கோட்டை மேடு.நிறைய கோட்டைலாம் இருக்கு அதனாலதான் இந்த இடத்துக்கு அந்த பேரு அப்படின்னு நினைக்காதீங்க.எனக்கும் அந்த இடத்தோட பெயர்க்காரணம் தெரியல ..முஸ்லிம் அன்பர்கள் நிறையபேரு வசிக்கிறாங்க.அந்த இடத்துல நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல் இருக்கிறது





நல்ல சுவையுடன் பிரியாணி கிடைக்கும்.முக்கியமா பீப் பிரியாணி, சுக்கா, சில்லி அனைத்தும் நல்ல சுவையுடன் கிடைக்கும்.சிக்கன் , மட்டன் கூட கிடைக்கும்.ஆனால் அதிகமா விற்பனை ஆவது பீப் மட்டும் தான்.எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.நாங்க மூணு பேரு போனோம்.நான்கு பிரியாணி இரண்டு சுக்கா ரூபாய் 170 .00 மட்டும் தான்.விலையோ குறைவு சுவையோ அதிகம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...