அருள்மிகு ஸ்ரீ எட்டுக்கை அம்மன் கீரம்பூர் நாமக்கல்
நான் கருர்ல இருந்து நாமக்கல் செல்லும்போது வழியில் அருள் மிகு எட்டுக்கை அம்மன் இவ்ளோ கிலோமீட்டர் அப்படின்னு போர்டு நிறைய பார்த்தேன்.சரி ரொம்ப புகழ் வாய்ந்த அம்மன் போல..... எதுக்கும் ஒரு கும்பிடு போட்டு வைப்போம் அப்படின்னு நினைச்சு அம்மன் இருக்கிற கீரம்பூர் வந்தோம். நெடுஞ்சாலையில் இருந்து இடப்புறம் பிரியும் மெயின் ரோட்டிலேயே ஒரு பெரிய நுழைவாயில் நம்மை வரவேற்கிறது.உள்ளே கொஞ்ச தூரம் ஊருக்குள் சென்றதும் மிக பிரம்மாண்டமாய் புத்தம் புதிதாய் கோவில்.....மீண்டும் ஒரு நுழைவாயிலுடன்...... சுற்றுப் புற சுவருடன்...
கோவில் நல்ல வேலைப்பாடுடன் இருக்கிறது.அம்மன் இங்கு எழுந்தருளிய போது இக்கோவில் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாம்.மலைகள் சூழ்ந்த கரட்டு மேடாக இருந்த பகுதி காலப்போக்கில் மாறி... மாறி.......இப்போது இன்னும் புதியாய் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார்கள்.
ஸ்ரீ எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு எட்டு கரங்கள் கொண்டதினால் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். கருங்கல்லில் மிகவும் தத்ரூபமாக அம்மனின் சிலை வடிக்கப்பட்டு இருக்கிறது.கருவறைக்கு செல்லும் வாயிலின் முன் இரண்டு காவல் தெய்வங்கள் இருக்கின்றன.கருவறைக்கு வெளியில் சப்த கன்னிமார் தெய்வங்கள், விநாயகர் சிலை இருக்கின்றன.
இக்கோவில் கொங்கு இனத்தை சேர்ந்த செம்பூத்தான், பண்ணை குலத்தினர் இவர்களின் பொறுப்பில் இருக்கிறது.அம்மன் என்றாலே உயிர்ப் பலி கொடுப்பார்கள்.ஆனால் இங்கு சைவ பூஜை மட்டுமே நடை பெறுகிறது.இக்கோவிலில் வேம்பும் வில்வ மரமும் தல விருட்சமாக இருக்கிறது.கொங்கு குல மக்களின் தெய்வம் ஸ்ரீ எட்டுக்கை அம்மன்.
அபிஷேக நேரம் காலை மாலை 6 மணி, பகல் 12 மணிக்கு.
நாங்கள் சென்ற நேரம் 12 மணிக்கு..நல்ல நேரம் தான்.அம்மனின் அருள் பெற்று கொண்டு திரும்பினோம்..

நாமக்கல் டு பரமத்தி வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteமச்சிக்கு பக்தியும் அதிகம்தான் போல, நல்ல பகிர்வு
ReplyDeleteபக்தி பழமே நீவிர் வாழ்க!
ReplyDeletearumai sir
ReplyDeleteஇதே நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ஓர் எட்டுக்கை அம்மன் ஆலயம் உள்ளது. இது ஈராயிரம் ஆண்டு பழமையானது என்றும், பதிணென் சித்தர்கள் வழிபட்ட ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.
ReplyDeletethanks...
ReplyDeleteபதிவுக்கு நன்றி..............
ReplyDelete