Sunday, June 3, 2012

திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கம் - கோவை

     கோவையில் இருந்து சிறுவாணி போற வழியில இரண்டு பக்கமும் ரொம்ப பசுமையா இருக்கும்.திராட்சை தோட்டம், பாக்கு மரங்கள், தென்னந்தோப்புகள் என பசுமை நிறைந்து இருக்கும்.திராட்சை தோட்டங்கள் நிறைய இருக்கிறதால் அங்குள்ள திராட்சை தோட்ட விவசாயிகள் விளைகிற பழங்களை மிகவும் குறைந்த விலைக்கு அவங்க சங்கத்து மூலமா நமக்கு விற்பாங்க.மாதம்பட்டியில் இருக்கிற அவங்க சங்கத்துல நாம மிக குறைந்த விலைக்கு வாங்கிகலாம்.டவுன்ல விக்கிற விலைய விட குறைந்த விலைக்கு கிடைக்கும்.இதன் மூலம் கமிஷன் மண்டி  இடைத்தரகர் விலை இல்லாமல் உற்பத்தி விலைக்கே நாம வாங்கறதால் விவசாயிக்கு நல்ல விலை கிடைக்குது.எப்பவாவது அந்த பக்கம் போனீங்கனா மறக்காமல், யோசிக்காமல் நிறைய வாங்குங்கள்.








 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விவசாயியின் தோட்டத்தில் உள்ள பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.திராட்சை மட்டுமல்லாமல் வாழை பழங்கள் கூட கிடைக்கின்றன.

இந்த  மாதிரி விளைகின்ற அனைத்து பொருள்களுக்கும் நல்ல விலை கிடைத்தால் விவசாயிகளின் உழைப்பு இன்னும் பெருகும்.வயல்வெளிகள் கான்க்ரீட் காடுகள் ஆகாது.

கிசுகிசு : கோவை குற்றாலம் போறவங்க, போயிட்டு வர்றவங்க என  இங்க எப்ப பார்த்தாலும் கூட்டம் இருக்கும்.அதிலும் நம்மாளுங்க இருக்காங்களே...சரக்குக்கு சைடு டிஷ்சே இதுதான்.அதிலும் கோவை குற்றாலத்துல அருவியின் ஜில்லுனு தண்ணீர்ல போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டா ...ரெண்டுமே....அருமை...ஹி ஹி ஹி

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

3 comments:

  1. // கோவை குற்றாலம் போறவங்க, போயிட்டு வர்றவங்க என இங்க எப்ப பார்த்தாலும் கூட்டம் இருக்கும்.அதிலும் நம்மாளுங்க இருக்காங்களே...சரக்குக்கு சைடு டிஷ்சே இதுதான்.அதிலும் கோவை குற்றாலத்துல அருவியின் ஜில்லுனு தண்ணீர்ல போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டா ...ரெண்டுமே....அருமை...ஹி ஹி ஹி//

    அனுபவசாலி சொன்னா சரியா இருக்கும்.

    ReplyDelete
  2. நல்ல செய்தி ஜீவா .எனக்கு ரொம்ப பிடுச்சது.கிசு கிசு தான் .நல்ல மேட்ச்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. // கோவை குற்றாலம் போறவங்க, போயிட்டு வர்றவங்க என இங்க எப்ப பார்த்தாலும் கூட்டம் இருக்கும்.அதிலும் நம்மாளுங்க இருக்காங்களே...சரக்குக்கு சைடு டிஷ்சே இதுதான்.அதிலும் கோவை குற்றாலத்துல அருவியின் ஜில்லுனு தண்ணீர்ல போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டா ...ரெண்டுமே....அருமை...ஹி ஹி ஹி//

    அனுபவசாலி சொன்னா சரியா இருக்கும். நானும் வழிமொழிகிறேன் இவரின் கருத்தை

    நல்ல பதிவுதான் ஜீவா நாங்களும் நிறைய வாங்கி வருவோம்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....