Sunday, June 17, 2012

க்ரில் சிக்கன்..

க்ரில் சிக்கன்..

நாமும் எவ்வளவு நாள்தான் ஹோட்டலில் போய் சாப்பிடறது...அப்புறம்  ஒரு பதிவ போடறது...இப்படியே இருந்தா என்ன பண்றது..?அதனால இன்னிக்கு எங்க வீட்டுல கிரில் சிக்கன் பண்ணினதை ஒரு பதிவா போடறேன்.நாங்க இப்போதான் புதுசா ஒரு ஓவன் வாங்கினோம்.அதுல எப்படியாவது கிரில் சிக்கன் பண்ணியே ஆகணும் அப்படிங்கிற முடிவோட கறி கடைக்கு போய் ரெண்டு பெரிய லெக் பீஸ் வாங்கி வந்தேன்.அப்படியே கொஞ்சம் ரெண்டு பக்கமும் கீறி விட்டு வாங்கினேன்.
வீட்டுக்கு வந்து சிக்கன் மசாலா, முட்டை வெள்ளை கரு, கார்ன் பவுடர், கொஞ்சம் உப்பு, வரமிளகாய் பொடி, கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் எண்ணெய் இதெல்லாம் கலக்கி அந்த சிக்கன் பீஸ்ல தடவி கொஞ்ச நேரம் ஊற வச்சிட்டு அப்புறம் அதை எடுத்து ஓவனில் கிரில் மேல இந்த பீஸை வைத்து 20 நிமிஷம் டைம் செட் பண்ணி ஓவனை ஆன் பண்ணியாச்சு...கொஞ்ச கொஞ்சமா அதன் வாசம் வர ஆரம்பிச்சது. திரும்பவும் திருப்பி வச்சு இன்னும் ஒரு இருவது நிமிஷம் .....முழுசா டைம் முடிஞ்சவுடன் எடுத்து பார்த்தா நல்லா வெந்து இருக்கு.கொஞ்சநேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டு பார்த்தா செம டேஸ்ட்...ரொம்ப நல்லா வந்தும் ...வெந்தும்  சுவையா இருக்கு...

நாங்க பண்ணின சிக்கன் இதுதான்...




எப்படியோ சைடு டிஷுக்கு இது சாப்பிட நல்லாத்தான்  இருக்கு.அடுத்த முறை மட்டன் சமைக்கணும்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

13 comments:

  1. தல., நாக்குல எச்சி ஊறுது, நமக்கு ஒரு லெக் பீஸ் கிடைக்குமா :)

    ReplyDelete
  2. வீட்டுக்கு வாங்க வரலாறு...சாப்பிடலாம்...

    ReplyDelete
  3. மச்சி,.... பாக்கவே நாக்கு சப்பு கொட்டுது.....

    ReplyDelete
  4. Looks good and healthy because it is not fried in oil. Good job.

    ReplyDelete
  5. நண்பா ,
    ஒரு வார்த்த முதலேயே கூப்பிட கூடாதா ?நல்ல சமையல் காரரும் ஆய்டிங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நண்பா ,
    ஒரு வார்த்த முதலேயே கூப்பிட கூடாதா ?நல்ல சமையல் காரரும் ஆய்டிங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சொந்த காசுல சூனியம் வச்சிடாரோ மாப்ளே அப்படின்னு தோனுச்சி பரவாலேது குட் பிக்ஞிங் ஆல் தி பெஸ்ட்

    ReplyDelete
  8. இனி நிறைய சமையல் பதிவுகளை எதிர்பார்க்கலாம்....

    ReplyDelete
  9. உங்களுக்கு சமைக்க தெரியுமா? சொல்லவே இல்லை?

    ReplyDelete
  10. மச்சி! உனக்கு சமைக்கத் தெரியும்!!!
    எனக்கு சாப்பிடத்தெரியும்!!!!

    நல்ல காம்பினேசன் இல்ல???

    :-)

    ReplyDelete
  11. ஹா ஹா ஹா ஹா சிக்கனை டிரில் எடுத்துட்டீங்க...!

    ReplyDelete
  12. அடுத்த சந்திப்பின் ஸ்பெஷல், நண்பரின் சிக்கன்.

    ReplyDelete
  13. செய்முறை நன்றாக இருந்தது. புகைப்படமும் ஆசையைத் தூண்டுவதாக உள்ளது.என்ன இந்த மைக்ரோ வேவ் அவன் எங்க வீட்லே இல்லே. வாங்கியவுடன் செய்து பார்த்து விட்டு கூப்பிட்டு சொல்றேன்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....