Wednesday, June 13, 2012

எலி வேட்டை....


எலி பிடிப்பது எப்படி..
சமீபத்தில் நம்ம மதுரைக்காரர் தமிழ்வாசி ஒரு பதிவுல எலி பிடிச்சத பற்றி போட்டு இருந்தார்.அவரு அந்த கால ஸ்டைலில் எடால் வச்சி அதுக்குள்ளே ஊசிப் போன வடையோ இல்ல தேங்காயோ வச்சி ரொம்ப கஷ்டப்பட்டு பிடித்து இருந்ததை எழுதி இருந்தார். இப்போலாம் எலிகள் ரொம்ப விவரமா இருக்கு.மசால் வடை சாப்பிடுவதில்லை, தேங்காய் சில்லு பிடிக்கறதில்லை. அதுகளும் பீசா பர்கர் ன்னு விரும்புது போல..காலத்துக்கு ஏத்த மாதிரி அதுகளும் மாறிடுச்சுக.
         எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம்.எங்க வீட்டிலேயும் எலிகள் ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருந்ததுக.அப்பப்ப ஹால்ல, பெட்ரூம்ல நம்மள மாதிரியே சகஜமா நடமாட்டிட்டு இருக்குதுங்க.அதுவும் இல்லாமல் என்னோட புது வண்டி டூ வீலர் சுசுகி அச்செஸ், வாங்கி மூணு மாசம் தான் இருக்கும், அதுல எலி குடியேறி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.உள்ளே இருக்கிற ஒயர் லாம் கடிச்சு நாஸ்தி பண்ணி வச்சி இருக்குதுக.வண்டியும் ஸ்டார்ட் ஆகல .கொண்டு போய் மெக்கானிக் கிட்டே கொடுத்து பிரிச்சு பார்த்தா ரெண்டு எலிகள் அலறி அடிச்சு கிட்டு ஓடுதுங்க.கூடவே  நம்ம மெக்கானிக்கும்.....
        இன்னிக்கு எப்படியாவது மிச்சம் இருக்கிற எலிய பிடிச்சே தீரணும் அப்படிங்கிற முடிவோட கடைக்கு போய் பார்த்தா ரொம்ப லேட்டஸ்ட் டெக்னாலஜிலாம்  வந்து இருக்கு.அதுல ஒண்ணு வாங்கி வந்தேன்.அது எலி புடிக்கிற கம் (GUM ).

ரொம்ப ஈசியான வேலைங்க.எலி நடமாடுற இடத்துல இதை பிரிச்சு வச்சிட்டா போதும்.எலி அது மேல நடக்கிற போது பசையில் அதான் கால்கள் ஒட்டி நடக்கவோ ஓடவோ முடியாத படி ஆகிடும்.அப்புறம் அலுங்காம குலுங்காம போய் அப்படியே அந்த அட்டையை மடக்கி கொஞ்ச நேரம் வச்சா எலி மூச்சு திணறி செத்துப் போய்டும்.அப்புறம் எலிய மட்டும் பிச்சு காக்கா கிட்ட போட்டுட்டு மீண்டும் இந்த அட்டையை அடுத்த எலிக்கு வைக்கலாம்.எலி மட்டுமல்ல கரப்பான் பல்லி, பூச்சி இது கூட பிடிக்கலாம்.
        இப்படிதாங்க இந்த அட்டைய வச்ச ஒரு மணி நேரத்தில நம்ம எலியார் மாட்டிக்கிட்டாருங்க.அப்புறம் நம்ம பதிவுக்கு ரெண்டு மூணு போஸ் கொடுத்துட்டு மண்டையை போட்டுட்டாருங்க.எங்க வீட்டுல பிடிச்ச எலி இது தாங்க..



 
 ம்ம்ம்ம்....எப்படியெல்லாம் பதிவ தேத்த வேண்டி இருக்கு பாருங்க.

கிசுகிசு: மாம்ஸ் மதுரைக்காரரே...உங்க லிங்க் தந்து இருக்கேன்..எதாவது பார்த்து போட்டு குடுங்க சாமியோவ்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

21 comments:

  1. கிசுகிசு: மாம்ஸ் மதுரைக்காரரே...உங்க லிங்க் தந்து இருக்கேன்..எதாவது பார்த்து போட்டு குடுங்க சாமியோவ்...///

    கோவை வர்றப்ப ரெண்டு எலி கம் வாங்கியாறேன் மச்சி....

    இந்த வாரம் நான் பதிவே போடாம நம்ம நண்பர்கள் என் பதிவின் லிங்க் மேல லிங்க் கொடுத்து என் பிளாக்கை காப்பாத்தறாங்கையா

    ReplyDelete
  2. அந்த கால ஸ்டைலில் எடால் வச்சி அதுக்குள்ளே ஊசிப் போன வடையோ இல்ல தேங்காயோ வச்சி ரொம்ப கஷ்டப்பட்டு பிடித்து //////

    ஆனா, முதல் அட்டெம்ப்ட்டிலே எலி மாட்டிக்கிச்சுயா

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்....எப்படியெல்லாம் பதிவ தேத்த வேண்டி இருக்கு பாருங்க.////

    விடுயா... விடுயா...

    நாலு பேருக்கு நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க...

    இதுக்கு போயி அலுத்துக்கிட்டு.....

    ReplyDelete
  4. ///கிசுகிசு: மாம்ஸ் மதுரைக்காரரே...உங்க லிங்க் தந்து இருக்கேன்..எதாவது பார்த்து போட்டு குடுங்க சாமியோவ்...///
    தமிழ்வாசி ...என்ன மாம்ஸ்...கொஞ்சமா தான் கமென்ட் போட்டு இருக்கீங்க...

    ReplyDelete
  5. கோவை நேரம் said...
    ///கிசுகிசு: மாம்ஸ் மதுரைக்காரரே...உங்க லிங்க் தந்து இருக்கேன்..எதாவது பார்த்து போட்டு குடுங்க சாமியோவ்...///
    தமிழ்வாசி ...என்ன மாம்ஸ்...கொஞ்சமா தான் கமென்ட் போட்டு இருக்கீங்க...///

    இன்னொரு எலி பிடிக்க போயிட்டேன் மச்சி....

    ReplyDelete
  6. இன்னொரு எலி பிடிக்க போயிட்டேன் மச்சி....///
    ஆமா எலிக்கறி சாப்பிட்டு இருக்கியளா

    ReplyDelete
  7. இது சூப்பரா இருக்கே!!!!!!

    போனவாட்டி ஊருக்கு போனப்போ அம்மா ஹாரர் படத்துல கொல்ரது மாதிரி ஒரு கன்னி வச்சிருந்தாங்க... அதாவது எலி மாட்டுன உடனேயே டூத்பேஸ்ட் ஆகிடும்........

    நான் தூக்கிப்போட்டேன்.....

    ஏதோ நாம மாட்டாம இருந்தா சந்தோஷம்தான் :)

    ReplyDelete
  8. //எலிக்கறி சாப்பிட்டு இருக்கியளா//

    காரைக்குடி பக்கத்துல ஏதொ டாஸ்மார்க்ல கெடக்குதுன்னு படிச்சதா நியாபகம் :)

    ReplyDelete
  9. நன்றி மௌன குரு...முன்னலாம் நீங்க சொன்ன படிதான்...ரத்தம்லாம் சிந்தி எலி ரொம்ப பாவமா இருக்கும்..

    ReplyDelete
  10. வயல் எலி ரொம்ப சூப்பரா இருக்கும் குரு...

    ReplyDelete
  11. //வயல் எலி ரொம்ப சூப்பரா இருக்கும் குரு..//

    ஆமா வயல் எலி தான் ஸ்கூல் பசங்க புடிச்சு 5 ரூபாய்க்கு டாஸ்மார்க்ல விக்குறாங்கன்னு குற்றம் நடந்தது என்ன போட்டாங்க

    ஆமா நீங்க சாப்ட்ருக்கிங்களா?

    ReplyDelete
  12. சிறுவயதில் சாப்பிட்டு இருக்கேன்..ரொம்ப டேஸ்டா இருக்கும்'

    ReplyDelete
  13. கோவை நேரம் said...
    வயல் எலி ரொம்ப சூப்பரா இருக்கும் குரு...////////////

    எலி சாப்பிட்ட புலி ஜீவா

    ReplyDelete
  14. //ரொம்ப டேஸ்டா இருக்கும்'//

    அடுத்தவாட்டி காரைக்குடி கெளம்பிடலாம் விடுங்க :)

    ReplyDelete
  15. போலாம் குரு.....ஒரு பதிவ தேத்தி விடலாம்

    ReplyDelete
  16. பங்கு...உம்மோட படைப்புதிறன் சூப்பருய்யா..

    படிக்கிற எல்லாருக்கும் ஏதாவது ஒரு டைம்ல நிச்சயம் உதவும் பங்காளி

    ReplyDelete
  17. நல்லாத்தான் பிடிக்கறீங்க எலியை???

    ReplyDelete
  18. மாப்ளே, உடனடியாக திருப்பூர்க்கு தேவைபடுதான் மேற்கொண்டு தகவல்களை வீட்டுகாரரிடன் கேட்கவும்

    ReplyDelete
  19. எலிகள் நடமாட்டம் திருப்பூரில் அதிகம் மாப்ளே

    ReplyDelete
  20. எலி பிடிக்குற லேட்டஸ்ட் டெக்னாலஜி, நம்ம வடிவேலு "மூட்டை பூச்சை கொல்லும் லேட்டஸ்ட் மெசின்" மாதிரி இல்லாம இருந்த சரி தான்..!

    ReplyDelete
  21. நல்ல அனுபவம் ஜீவா .எலி கறி எனக்கும் டெஸ்ட் பண்ண குடுங்க

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....