Tuesday, June 12, 2012

சுருளி அருவி (suruli falls) - சுருளிப் பட்டி தேனி மாவட்டம்


சுருளி அருவி
தேனி மாவட்டம் கம்பம் அருகில் சுருளிப்பட்டி என்கிற ஊரை அடுத்து இந்த சுருளி பால்ஸ் இருக்கிறது.கம்பத்தில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த பால்ஸ் இருக்கிறது. வழிநெடுக இயற்கை அன்னை திராட்சை தோட்டங்களுடனும், தென்னை மரங்களுடன் வியாபித்து இருக்கிறாள்.(வர வர ரொம்பத்தான்  தமிழ் பூந்து விளையாடுது..) வழியில் தோட்டங்களில் திராட்சை விற்கிறார்கள் விலை கிலோ 35 ரூபாய்.
 



முதலிலேயே நம்மை செக் பண்ணி அனுப்பறாங்க..(நம்மள பார்த்தாலே கண்டு பிடிச்சிடுறாங்களே..என்ன விஷயம்.).அப்புறம் உள்ளே நுழைந்த உடன் வரிசையாய் கடைகள்.சர்பத், வடை, போண்டா  பஜ்ஜி, பொரிகடலை, மாங்காய், என நிறைய சிறு தொழில் முதலாளிகள்.நமக்கு வேணுங்கிறத சோப்பு ஷாம்பு எல்லாம் வாங்கிகிட்டு நடக்க ஆரம்பித்தோம்.



எங்கும் மரங்கள். ஓங்கி உயர்ந்த மரங்கள், நல்ல இதமான ரம்யமான சூழ்நிலை என நன்றாக இருக்கிறது.அதிலும் ஒரு மரம் ரொம்ப உயரமானது வேரோடு சாஞ்சு அடுத்த மரத்து மேல தொட்டுட்டு இருக்கு.



எப்பவும் போல இங்க நம்ம முன்னோர்கள் ...வருகிற மக்களை விட இவங்க அதிகமா இருக்காங்க.இவங்க இம்சை தாங்க முடியல.கையில் கொண்டு போற பொருள்களை பிடுங்கிறதுல ரொம்ப குறியா இருக்காங்க.
கிட்ட தட்ட ஒரு கிலோ மீட்டர் உள்ளே நடந்து போனா..அருவி சத்தம் நம்ம காதை பிளக்கிறது. ஓ ன்னு பயங்கர இரைச்சல்.......சிலுசிலுவென சாரல் காத்து..... இப்படியெல்லாம் இருக்கும்னு எதிர்பார்த்து விடாதீங்க...........ஒண்ணுமே இல்லை....சும்மா ஏதோ அருவி அப்படிங்கிற பேருக்கு கொஞ்சமா தண்ணீர் ஒழுகுது.


இதுல குளிக்க ஏகப்பட்ட பேர் வரிசையில் காத்து இருக்காங்க.இப்போ சீசன் இல்லாததால் நீர் வரத்து கம்மியா இருக்கு.என்ன பண்றது...வந்தது வந்தாச்சு.சரி ....ஒரு முழுக்கு போட்டுட்டு போவோம் அப்படின்னு நினைச்சு அந்த வரிசையில் கலக்க ஆரம்பித்தோம்.நம்ம வீட்டு ஷவர் ல கூட தண்ணீர் கொஞ்சம் வேகமா வரும், ஆனா இங்க...சுத்தம்..தண்ணீர் உடம்பில் பட்டவுடன் செம குளிர்ச்சி.நன்றாகத் தான் இருக்கிறது....என்ன...நம்ம உடம்பு நனைய ரொம்ப நேரம் பிடிக்குது.கொஞ்ச நேரம் குளித்து விட்டு வந்தோம்.அப்புறம் இங்க ஆண்கள் பெண்கள் என்ன தனித்தனி வழி இருக்கிறது.பெண்களுக்கு உடை மாற்றும் அறைகள் இருக்கின்றன.ஆனா சுற்றுப்புறம் லாம் ரொம்ப மோசமா இருக்கு,குளிக்க வர்றவங்களோட உடைகள், சோப்பு காகிதம், ஷாம்பு பாக்கெட் என நிறைய குப்பை கூளங்களாக இருக்கின்றன.தண்ணீர் செல்லும் பாதை அனைத்தும் ஒரே குப்பைகள்.
அப்புறம் செக் போஸ்டில் இருந்து அருவிக்கு வருகிற வழி நன்றாக செப்பனிட பட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.நம்ம தமிழக சுற்றுலா துறை என்ன பண்ணுதுன்னு தெரியல.சுற்றுலா பயணிகளின் வருகை நிறைய இருக்கிறது.ஆனால் இங்கு தண்ணீர் வரத்து இல்லாத தால் வந்து ஏமாற்றம் அடைகிறார்கள்.

கிசு கிசு:
சுருளி பட்டி பக்கத்துல இருக்கிற ஒரு ஊரான காமயகவுண்டன் பட்டி ரொம்ப புகழ் வாய்ந்தது.ஏன்னா நம்ம சங்க உறுப்பினர் சம்பத், தமிழ் பேரன்ட்ஸ் என்கிற வலைப்பதிவின் ஓனர் அங்க தான் பிறந்து வளர்ந்து இருக்கார்.(பங்கு....லிங்க் கொடுத்துட்டேன்..வரவேண்டியது வந்து விடணும்)

நேசங்களுடன்  
ஜீவானந்தம் 

30 comments:

  1. //வழியில் தோட்டங்களில் திராட்சை விற்கிறார்கள் விலை கிலோ 35 ரூபாய்.//

    அது அஃபிஸியல் அங்கங்க பழத்த ஆட்டயப்போட்ட கெழவிக இருக்கும் அவங்கட்ட 20 ரூபாய் தான் :)

    ReplyDelete
  2. அங்க கெடக்கிற வடைகள் ரொம்ப நல்லா இருக்கும்


    பக்கத்துல ஒரு கோவில் இருக்கு அத பத்தி சொல்லலியே?

    கறிக்கஞ்சி சாப்பிடலாம் நல்லா கூப்ட்டு கூப்ட்டு சாப்பாடு குடுப்பாங்க...

    கோவில்ல நெரைய சித்தர் சாமிகள் இருப்பாங்க

    நல்ல பதிவு சூப்பர் சார்

    ReplyDelete
  3. வீடு சுரேஸ்குமார்June 12, 2012 at 9:30 PM

    நாங்க போகும் போது ஈ...காக்கா கூட இருக்காது கறி மீன் சரக்கு சாப்பிட்டு குளிச்சிட்டு நல்லா தூங்குவோம்...இப்ப சரக்கும் இல்லை.....! கறியும் இல்லை.....!

    ReplyDelete
  4. நன்றி மௌன குரு அவர்களே..ரொம்ப தகவல்கள் தெரிஞ்சு இருக்கே...நீங்க அந்த ஏரியாவா? நானும் பார்த்தேன்..நிறைய பேரு கூட்டமா உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க.ஒருவேளை கட்டு சோறு கொண்டு வந்து சாப்பிட்டு கொண்டு இருப்பாங்களோ அப்படின்னு நினைச்சேன்.அப்புறம் ரெண்டு காவி சாமியார்களை பார்த்தேன்.

    ReplyDelete
  5. //கறி மீன் சரக்கு சாப்பிட்டு குளிச்சிட்டு நல்லா தூங்குவோம்...இப்ப சரக்கும் இல்லை.....! கறியும் இல்லை.....!//

    போன வருஷம் நெறைய சமூக விரோத நடவடிக்கைகள் சோ சட்டம் தன் கடமையை செய்கிறது

    ReplyDelete
  6. //கறி மீன் சரக்கு சாப்பிட்டு குளிச்சிட்டு நல்லா தூங்குவோம்...இப்ப சரக்கும் இல்லை.....! கறியும் இல்லை.....!//

    போன வருஷம் நெறைய சமூக விரோத நடவடிக்கைகள் சோ சட்டம் தன் கடமையை செய்கிறது

    ReplyDelete
  7. //நீங்க அந்த ஏரியாவா? //

    இல்லை கேரளா மூணார்


    //கட்டு சோறு கொண்டு வந்து சாப்பிட்டு கொண்டு இருப்பாங்களோ அப்படின்னு நினைச்சேன்.//

    இல்லை கெடாவெட்டுக்கு பேர் போன ஊர் அது

    //அப்புறம் ரெண்டு காவி சாமியார்களை பார்த்தேன்.//

    சித்துவேலைஎல்லாம் பயங்கரமா பாக்கறதா சொல்லுவாங்க... பெண் வசியம் அந்த மாதிரி... உண்மையோ பொய்யோ தெரியல

    ReplyDelete
  8. சுருளி பால்ஸ்... நானும் போய் ஏமாந்திருக்கேன்.

    ReplyDelete
  9. பங்காளி ஜீவாவிற்க்கு...

    முதலில் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    தற்போது கோடைகாலம் ஆகையால் தண்ணீர் வரத்து கம்மியாக உள்ளது.மேற்படி அந்த அருவி பல சித்தர்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.பக்கத்திலேதான் கோடிலிங்க சுவாமி கோயிலும் உள்ளது.

    அருவியில் கொட்டும் நீரானது வழிநெடுக பல அறிய நோய் தீர்க்கும் மூலிகைகளின் மேல் பயணித்து குளுமையுடன் நம் மேல் விழுகையில் தீராத பல நோய்களையும் தீர்த்து வைக்கிறது.இது நான் நேரடியாய் கண்ட உண்மை.

    மற்றபடி அங்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்கப் பயன்படுத்தும் உடைமைகளை ஆங்காங்கே எறிந்துவிட்டுப் போவதால் வந்த வினைதான் அந்த குப்பைகள்.

    கோவையில் நம் முன்னோர்களுக்கு ஈமசடங்குகள் செய்ய பேரூர் படித்துறை இருப்பது போல் அங்கு எங்களுக்கு சுருளித்தீர்த்தம் உள்ளது.அதே போல் காதுகுத்து,கடாவெட்டு,கல்யாணம் போன்ற விஷேசங்களும் அங்கே நடக்கிறது.இங்குள்ள பூதநாராயணன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது.


    அடுத்த முறை உங்களை அருவியின் நீர் உருவாகும் சுனைகளுக்கு அழைத்துச் செல்கின்றேன்..

    உண்மையில் ஊருக்கே சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறது

    நன்றி
    சம்பத்குமார்

    ReplyDelete
  10. நானும் ஒரு தபா போயிருக்கேன் தலைவா.., தண்ணீர் கீழ கம்மியா வந்ததினால இதுக்கும் மேல பாறைகளின் மீது ஏறிப்போய் குளித்திருக்கிறேன் :)

    ReplyDelete
  11. //வழிநெடுக இயற்கை அன்னை திராட்சை தோட்டங்களுடனும், தென்னை மரங்களுடன் வியாபித்து இருக்கிறாள்.(வர வர ரொம்பத்தான் தமிழ் பூந்து விளையாடுது..) //

    ஆமா ஆமா கவனிச்சிக்கிட்டு தான் வாரேன்

    ReplyDelete
  12. சுருளி அருவி உருளி அருவியாகிட்டதே..தக்காளிங்க எஸ்ஐ சொரண்டி புட்டாங்களே.

    ReplyDelete
  13. யோவ் மாப்ளே எங்கேயா நீர் நீராடிய படம்

    ReplyDelete
  14. கிசு கிசு அப்படியா...பங்கு வந்து தாரேன்

    ReplyDelete
  15. படங்கள் மிகவும் நன்றாக இருந்தன . .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. //மனசாட்சி™ said...
    யோவ் மாப்ளே எங்கேயா நீர் நீராடிய படம்//

    என்னது மாப்ள நீராடின படமா? அதெல்லாம் போட்டா பிளாக்கு தாங்குமா இல்லையா மச்சி

    ReplyDelete
  17. //மனசாட்சி™ said...
    யோவ் மாப்ளே எங்கேயா நீர் நீராடிய படம்//

    என்னது மாப்ள நீராடின படமா? அதெல்லாம் போட்டா பிளாக்கு தாங்குமா இல்லையா மச்சி////நான் என்ன ஷகிலா வா..மாம்ஸ்

    ReplyDelete
  18. நண்பா நேர்ல போயிட்டு வந்த மாதிரி இருக்கு

    ReplyDelete
  19. நண்பா நேர்ல போயிட்டு வந்த மாதிரி இருக்கு

    ReplyDelete
  20. ரொம்ப அருமையான படங்கள் பாஸ்...
    எங்க ஊரை பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கேங்க...
    நமக்கு சுருளி பக்கத்துல கூடலூர்.. சொந்த ஊரை பத்தி படிக்ககிறதுல வர திருப்தி வேற எங்கேயும் கிடைக்கிறது இல்லை..
    சீசன் நேரத்துல போனா இன்னும் நல்லா என்ஜாய் பண்ணி இருப்பேங்க

    ReplyDelete
  21. நன்றி சக்தி...அப்போ இனி போக மாட்டீங்களா

    ReplyDelete
  22. ரொம்ப நன்றி ராஜ்...அந்த ஊர்காரங்களா..

    ReplyDelete
  23. ஆமா பாஸ், சொந்த ஊர் கூடலூர்...படிச்சது எல்லாம் கோயம்புத்தூர் (1989 முதல் 2004 வரைக்கும் கோவை தான்).. காலேஜ் முடிக்கிற வரைக்கும் கோவை தான்... அப்புறமா சொந்த ஊருக்கு திரும்பிடோம்...பெற்றோர்கள் இப்போ இருக்கிறது கூடலூர்...
    இப்ப நான் வேலை செய்யுற ஊர் ஹைதரபாத்..இது தாங்க நம்ம வரலாறு..

    ReplyDelete
  24. அடுத்தமுறை போகும்போது கண்டிப்பா பாத்துடறேன்... படங்கள் அருமை.

    ReplyDelete
  25. ஒவ்வொரு விஷயமா நோட் பண்ணி வைக்கிறதுங்கறது சாதாரணமல்ல.. சூப்பர்..

    ReplyDelete
  26. ஆரம்பம் எப்பவும் அமர்க்களம்
    முடிவு அதைவிட ஆர்ப்பாட்டமாய்
    அமைந்துவிடுகிறது ..............
    ஒரு தகவலுக்கு பல தகவல்கள் கிடைத்தது ............அருமையான படங்கள் ..........மகிழ்ச்சி

    ReplyDelete
  27. சுருளில தீர்த்தம் போட்டிங்களா இல்லையோ....

    ReplyDelete
  28. சுருளி அருவியில் நீராடி பாவத்தை போக்கிய ஜீவா இனி முன்னேற்றம் தான்..

    ReplyDelete
  29. கிசு கிசு:
    சுருளி பட்டி பக்கத்துல இருக்கிற ஒரு ஊரான காமயகவுண்டன் பட்டி ரொம்ப புகழ் வாய்ந்தது.ஏன்னா நம்ம சங்க உறுப்பினர் சம்பத்,////

    ஏலே மச்சி, சம்பத் ஊர்ல இருந்துட்டு சொன்ன கிசுகிசு வேற.... அதை இங்கே போடலியா?

    ReplyDelete
  30. தமிழ்வாசி...அப்படியே போட்டா என்ன ஆகும்..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....