Friday, June 8, 2012

கோவை டு சென்னை டு கோவை – பயணம் ஒரு பார்வை



சென்னையில் ஒரு வேலை விஷயம் காரணமாக கடந்த ஞாயிறு அன்று அவசரமா இரவோட இரவா கிளம்பி சென்னைக்கு போனேன். கோவையில் இருந்து கரூர் போய் அங்க என் வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் நாமக்கல், ராசிபுரம், ஆத்தூர் வழியா கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை வந்து பைபாஸ் பிடிச்சு காலையில் 9 மணிக்கு லாம் கோயம்பேடு வந்துட்டேன்.
    பூந்த மல்லி பைபாஸ் ரோட்டில் உள்ள எந்த பங்கிலும் பெட்ரோல் இல்லவே இல்லை.காத்து வாங்குது.டீசல் மட்டும் தான். நிலைமை சீராக ஓரிரு நாட்கள் பிடிக்கும்ன்னு சொன்னது நம்ம பம்ப் பையன்.

 அப்புறம் மெட்ரோ ரயில் திட்டம் வேலை ஜரூராய் நடை பெற்று கொண்டு இருக்கிறது. ரோட்டுக்கு நடுவுல பிரமாண்டமாய் புது புது பில்லர்கள்....எப்போ முடியும்னு தெரியல.


கோயம்பேடு பாலத்துல இருந்து இறங்கும் போது நம்ம கேப்டன் மண்டபம் கண்ணுக்கு தெரிஞ்சது.எல்லாரும் புதுக்கோட்டைக்கு போய் இருப்பாங்க போல..இங்கும் காத்து வாங்கிட்டு இருக்கு யாருமே இல்லை போல..இவர் மட்டும் ரொம்ப பேனர்களில் சிரித்துக் கொண்டு இருந்தார்.

அப்புறம் கொஞ்ச தூரம் தள்ளி எதுத்தாப்ல இருக்கிற தெரு விளக்குகள் இன்னும் எரிஞ்சிட்டு இருந்துச்சு. அப்புறம் எப்படி தீரும் இந்த மின் வெட்டு பிரச்சினை.(அப்பாடா...அரசியலை கலந்திட்டோம்...)

அப்புறம் வளைஞ்சு நெளிஞ்சு கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வழியா செல்லும்போது தலைக்கு மேல மெட்ரோ பாலம். இதை எப்ப கட்டினாங்க அப்படின்னு யோசிக்கும்போதே கடந்து விட்டோம். நம்ம பயணம் கோயம்பேடு, வளசரவாக்கம், மீனாட்சி காலேஜ் இப்படி இந்த ஏரியா விலேயே முடிஞ்சதினால் வெளிய எங்கும் போக முடியல. அப்புறம் எப்பவும் போல செம வெயில் காலையிலேயே கொன்னு எடுக்கிறது. இதை தணிக்கவே அப்பப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா நம்ம அம்மணிகள். நம்ம அண்ணார் வீடு வளசரவாக்கத்தில் இருக்கு. அங்க போய் ரெஸ்ட் எடுத்துட்டு பார்க்க வேண்டிய வேலையை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு சாயந்திரம் மீண்டும் ஒரு விசிட் மீனாட்சி காலேஜ் பக்கம்.... அப்பத்தான் நம்ம அம்மணிகள்லாம்  வெளிய வாராங்க. (சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கோம்..ஹி ஹி ).....கொஞ்ச நேரம் அம்மணிகளை தரிசித்து விட்டு, அப்படியே வீட்டுக்கு வந்தோம்.
வர்ற வழியில தேவி கருமாரியம்மன் தியேட்டர் பக்கத்துல ஏதோ ஒரு கோவில் விசேசம் போல...அய்யர்லாம் ரேடியோ வுல மந்திரம் சொல்லிட்டு இருந்தாங்க.சாமி கட் அவுட் லாம் வச்சி இருந்தாங்க.

சரி அடுத்து என்ன பண்ணலாம்...அரசு கடைக்கு போலாம்... வளசரவாக்கம் மனோ ஷூட்டிங் ஹவுஸ் பக்கத்து தெருவான ஸ்ரீதேவி குப்பம்ல ஒரு புழுக்கமான டாஸ்மாக் இருக்கு.உள்ளே போனா எல்லாம் வேர்த்து விறுவிறுத்து குடிச்சிட்டு இருக்காங்க. வேற வழி....நாங்களும் அப்படியே அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகி கொஞ்ச நேரம் கழிச்சு வேர்த்து விறுவிறுத்து வெளில வந்தோம்.(கவர்மென்ட் ரொம்ப மோசமா பார் நடத்துறத இங்க மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா பக்கமும் பார்க்கலாம். என்ன பண்றது.தமிழகத்தின் குடிமகனா போய்ட்டோம் அரசுக்கு வருமானம் வரணும் இல்லியா...)
அடுத்த நாள் செவ்வாய் காலை செங்கல்பட்டுல ஒரு ஜோலி.அங்க போற வழியில வண்டலூர் ஜூ பார்த்தேன்.கட்டிட வேலைலாம் நடந்திட்டு இருக்கு. திறப்பு விழாவிற்கு யாரோ ஒரு அரசியல்வாதி வருகைக்கு காத்திருக்குது போல....

அப்புறம் திருச்சி வழியா கரூர் போலாம்னு முடிவு பண்ணி வண்டிய கிளப்பினோம். போற வழியெங்கும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் இடங்கள். கலர் கலராய் கொடிகள், காம்பவுண்ட் ஆடம்பர வளைவு, என என்னென்ன செய்து எப்படியெல்லாம் ஏமாத்தலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் இடங்கள் நிறைய.......டிவியில் அடிக்கடி வர்ற மெகா சீரியல் நடிகர் நடிகைகளின் விளம்பர யுக்தியோட நம்மள நிலத்தை வாங்க சொல்லி இம்சையை கூட்டுவாங்களே அந்த மாதிரி இடங்கள் நிறைய... ஒரு வசதியும் கிடையாது ஆனாலும் சென்னையில் இருந்து ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம், நிறைய காலேஜ், மருத்துவமனை, பள்ளிக்கூடம் அப்புறம் அது இருக்கு, இது இருக்கு என அளந்து விடும் சீரியல் நடிகர்களின் போலி நடிப்பினை கண்டு ஏமாறுகிற மக்களுக்கு விற்க முயற்சி செய்யும் இடங்கள் என நிறைய... என்ன பண்றது...இப்ப இந்த தொழில் தான் இப்போ உச்சத்தில் இருக்கு.ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இல்லக் கனவை செல்லாக் கனவாக மாற்றும் யுக்தி இந்த ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு இருக்கிறது. அதுவும் டிவியில் இந்த நடிகர்கள் சொல்லுவாங்க.........."நீங்க போன் பண்ணினா உங்க இடத்தில இருந்து பிக்கப் செய்து சைட்டை சுற்றி காட்டி விட்டு வருவோம் என்று....கோவையில் இருந்து கூப்பிட்டா இங்க வந்து என்னை பிக்கப் பண்ணுவாங்களா..? ஒரு டவுட்டு///....எப்படியோ மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி.


அப்புறம் வேப்பூர் என்கிற ஊரில் மதிய உணவை முடித்து கொண்டு மறுபடியும் பயணம்....அப்புறம் பெரம்பலூர் வந்து அங்க இருந்து துறையூர், முசிறி, குளித்தலை வழியாய் கரூர் சென்று வீட்டில் தஞ்சம் அடைந்தேன். (என்னா ஒரு நிம்மதி ...கோவையில் இருந்து கரூர் ..அப்புறம் சென்னை...வழில நிறைய விபத்துக்குண்டான வண்டிகள்...அதே மாதிரி வரும்போதும் அப்படியே....நம்ம டிரைவருக்கு நன்றி..........உசிருக்கும் வண்டிக்கும் சேதாரம் இல்லாமல் கொண்டு வந்து சேர்த்தமைக்கு.).அன்னிக்கு நைட் நம்ம அரசுக்கு கொஞ்சம் வருமானம் தந்துவிட்டு  அப்புறம் வாத்து கறி  சாப்பிட்டு விட்டு படுக்கையை போட்டேன். நல்ல உறக்கம்.இரண்டு நாளாய் வண்டியில் அலைந்து திரிந்ததினால்...
அடுத்த நாள் நம்ம கோவை நோக்கி பயணம்...அவ்ளோதான் நம்ம பயண கட்டுரை
கிசுகிசு:
பெரம்பலூர்ல இருந்து துறையூர் செல்லும் வழியில் ஒரு ஊர் பேரை பார்த்தேன்.அதை பார்த்து விட்டு சிரித்த சிரிப்பு இருக்கே....முடியல...அதுவும் நம்ம டிரைவர் அடிச்ச கமென்ட் என்னன்னா...பஸ்ல ஏறி கண்டக்டர் கிட்ட எப்படி டிக்கெட் வாங்குறது.(..........ஒண்ணு கொடுங்க? இதுக்கு எதுக்குடா அங்க போகணும்).......எவனாவது எங்க போறன்னு கேட்டா என்ன சொல்லுவாங்க....அப்படின்னு..... ஹி ஹி ஹி ஹி 

அந்த பெருமை மிக்க ஊர் இது தாங்க....

கிசுகிசு : ரொம்ப நீளமான பதிவுன்னு நினைக்கிறேன் ........ஸ்ஸ்ஸ்  முடியல.....ஒரு பதிவ தேத்த.....நம்ம தாவு தீர்ந்து போகுது...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 


10 comments:

  1. ஆமா.... அரசுக்கு வருமானம் தராட்டின்னா தூக்கம் வராதே உங்களுக்கு...

    ReplyDelete
  2. வாங்க.பிரகாஷ் ..என்ன பண்றது...நிறைய பேருக்கு விலையில்லா பொருள் தரனுமே...

    ReplyDelete
  3. // .கொஞ்ச நேரம் அம்மணிகளை தரிசித்து விட்டு, அப்படியே வீட்டுக்கு வந்தோம்.//

    அந்த ரோசா கூட்டத்தில் மப்டி உடையில் பெண் போலீசும் இருப்பார்கள் ஜீவா.

    ReplyDelete
  4. ஓஹோ..போலிஸ் அம்மணியும் இருக்குமா...?

    ReplyDelete
  5. தனியாக போய் தரிசனம் பண்ணிய ஜீவாவை கண்டிக்கிறேன்

    ReplyDelete
  6. மீனாட்சி காலேஜ்லே...பாக்கிற மாதிரி
    இருக்காதே!
    உங்க ரேஞ்சுக்கு ஸ்டெல்லா மேரிஸ்...எத்திராஜ்தான் ஓ.கே

    ReplyDelete
  7. வணக்கம் சினிமா ரசிகனே....உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்தும் தெரிந்து வைத்து இருக்கறீர்களே...

    ReplyDelete
  8. இரவு வானம் அடுத்த முறை போலாம் ..கும்பலோட...

    ReplyDelete
  9. நானும் வருவேன்...

    மாப்ளே என்ன சேலம்? ம்

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான அனுபவங்கள்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....