Friday, June 22, 2012

பாண்டிச்சேரி ...குடிமகன்களின் தேசம்


பாண்டிச்சேரி ...குடிமகன்களின் தேசம்
திண்டிவனத்தில் இருந்து பாண்டி செல்லும் ரோட்டில் செல்ல செல்ல மனம் ரொம்ப குதூகலம் அடைந்து கொண்டு இருந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் பாண்டியை அடைந்து விடுவோம் என்பதினால்....
ஜிப்மர் மருத்துவமனை தாண்டியவுடன் நம்ம பங்காளி ஒருவர் தள்ளாடியபடியே வர நமக்கோ கை நடுங்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் மக்களை ஏற்றிய கூண்டுவண்டி ஒன்றும் தடுமாறியபடியே...
சீக்கிரம் ரூம் போடறோம்...ஒரு கட்டிங் போடறோம்...அப்படியே டிஸ்கஸ் பண்றோம்...என்று சொல்லியபடியே பீச் அடைந்தோம்..சாயங்காலம் நேரம் வண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் இரண்டு தெருக்கள் தள்ளி ஒயிட் டவுனில் வண்டியை பார்க் பண்ணிவிட்டு பீச் நோக்கி நடந்தோம்...
பீச் ரோட்டில் நிறைய பேர் வாக்கிங்கும் ஒரு சில பேர் கடலை நோக்கி உட்கார்ந்தும்...இன்னும் சில பேர் கடலை போட்டு கொண்டும் ..அதுக்கு தகுந்த மாதிரியே தள்ளு வண்டியில் கடலை வறுத்து கொண்டும் இருக்கின்றனர் (ஒரு பாக்கெட் பத்து ரூபாய்.) அதை வாங்கி தின்றபடியே நடந்த சில பேரும்....அந்த பீச் ரோட்டை முழுவதும் நிறைத்து இருந்தனர்..முழுக்க மனித தலைகள்....அதிலும் ஒரு சுகம்...நிறைய அம்மணிகள் அழகழகாய்...அரைடவுசருடன் ....திரும்பி செல்ல மனமில்லாமல்..நின்று இருந்தோம்..ஆயினும் பாண்டிக்கு வந்த நம் கடமை நம்மை ஞாபக படுத்தியதால்...பீச் காற்றினை கொஞ்சம் உள்வாங்கி கொண்டு வெளியேறினோம்...
அருகில் இருந்த ஹோட்டல் கான்டினென்டலில் ரூம் போட்டு விட்டு நம்ம கச்சேரியை ஆரம்பித்தோம்..... 

அடுத்த நாள் காலை சுகமாய் விடிந்தது...காலை ஒன்பது மணிக்கு ரூமை காலி செய்து விட்டு பீச் ரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு வேணும்கிற அளவுக்கு போட்டோ போஸ் லாம் எடுத்து கிட்டு அப்படியே நடந்தோம்... 





மகாத்மா காந்தி சிலையின் முன்னால் ஒரு சில போட்டோக்களும்..(எனக்கொரு டவுட்டு...குடிமகன்களின் தேசத்தில் மதுவை எதிர்த்த மகாத்மா காந்தி அவர்களின் சிலை எதுக்கு வைக்கணும்..?) .பாண்டிச்சேரி தலைமை செயலகம் முன்பும் ஒரு சில போட்டோக்களும் எடுத்து காலை டிபனை கொஞ்சமாய் முடித்து கொண்டு மார்க்கெட் கிளம்பினோம்.
மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இருக்கிறது.சிவப்பு தொப்பி போலிஸ்காரர் ஒருத்தர் டிராபிக் சரி செய்து கொண்டும், எங்கள் வண்டிக்கு வழி விடாமல் இலைகளை ஏத்திக்கொண்டு திருக்குறளின் பெருமையை பறை சாற்றும் விதமாக அவரது வண்டியில் குறளும் விளக்கமும் எழுதி இருந்ததால் அவரின் செயலுக்கு நன்றி தெரிவித்துவிட்டு , மார்க்கெட்டில் வண்டியை பார்க் செய்து விட்டு பர்ச்சேஸ் அனைத்தும் முடித்து விட்டு செல்கையில்...ஓரிடத்தில் செம மீன் கவிச்சி...அந்த வாசத்தை மோப்பம் பிடித்து கொண்டே சென்றதில் அது ஒரு மீன் மார்க்கெட்....உள்ளே நுழைந்த வுடன் ஏகப்பட்ட அம்மணிகள்...அனைவரும் கொஞ்சம் கொஞ்சமா மீன்கள் வைத்து கொண்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள்..ஏகப்பட்ட மீன் வகைகள்...அம்மணிகளும் தான்.......உள்ளூர் கிழவி முதல் வெளியூர் அம்மணிகள் வரை....


கொஞ்ச நேரம் சுவாசித்து விட்டு வெளியேறினோம்..அடுத்த  பதிவு மப்பான பதிவு...இருங்க வாறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
 

9 comments:

  1. நல்ல இருங்க !!!!!!!!!!!!! சிட்டிசன்னுகளா

    ReplyDelete
  2. //////எனக்கொரு டவுட்டு...குடிமகன்களின் தேசத்தில் மதுவை எதிர்த்த மகாத்மா காந்தி அவர்களின் சிலை எதுக்கு வைக்கணும்..?//////

    அவரை (சிலையை) பார்த்த பின்னாடியாவது நம்மாளுக குடிக்காம இருப்பாங்களான்னு ஒரு நப்பாசை தான் :)

    ReplyDelete
  3. தனியா போய் கொண்டாடிட்டியே மச்சி

    ReplyDelete
  4. //நம்ம கச்சேரியை ஆரம்பித்தோம்//

    மாப்ளே அதுக்கப்புறம் நடந்தது என்ன? நிஜம் அறிய ஆவா

    ReplyDelete
  5. ஒக்கே ஒக்கே

    என்னாது மப்பா இருக்குமா அடுத்தது - அதுல்லாம் இருக்கட்டும் மொதல்ல //கச்சேரியை ஆரம்பித்தோம்.....
    ??????????????????????????????

    அடுத்த நாள் காலை சுகமாய் விடிந்தது//

    இடையில் (கேள்வி குறி) நடந்தது சொல்லுங்கப்பு

    ReplyDelete
  6. கலக்கு நண்பா

    ReplyDelete
  7. மச்சி... போன்ல இன்னும் என்னனமோ சொன்னிங்க?????

    ReplyDelete
  8. வந்த அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....