Thursday, June 14, 2012

பரப்பலாறு நீர் தேக்க அணை - ஒட்டன்சத்திரம்

       சுருளி பால்ஸ் போய்ட்டு திரும்பி வரும்போது ஒட்டன்சத்திரத்தில் ஒரு மலை இருக்கு, அதுல போனா பாச்சலூர் என்கிற மலை கிராமத்திற்கு போலாம் என்று நம்ம நண்பர் சொன்னதினால் வண்டியை அங்க திருப்பினோம்.மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமாக இந்த பாச்சலூர் இருக்கிறது.ஓரிரு ஹேர்பின் வளைவுகள் கொண்ட மலை பாதையில் பயணித்தோம்.மலையில் பயணிக்கிற உணர்வுகள் போன்று எதுவுமே இல்லை.பசுமையோ, குளிர்ச்சியோ எதுவுமே இல்லை.ஆனாலும் புதிய இடத்தை காண போகிற ஆவல் நிறைந்து இருந்தது.


        வடகாடு என்கிற ஊர் முதலில் நம்மை வரவேற்கிறது.எல்லைக் கருப்பண்ண சாமியும் வரவேற்கிறார்.ஒரு கும்பிடு போட்டு விட்டு கொஞ்ச தூரத்தில் சென்றதும் பரப்பலாறு நீர் தேக்க அணை வளைவினை பார்த்தோம்.பார்த்ததும் பாச்சலூர் செல்லும் திட்டத்தை ஒதுக்கி விட்டு அணைக்கு கிளம்பினோம்.(இருட்டானதும் ஒரு வகையில் காரணம் )


       அணைக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி இருந்தால் தான் உள்ளே விடுவோம் என்றனர்.அங்கே வேலை செய்யும் ஒருவருடன் கேட்டபோது அவர் எங்கோ போன் போட்டு நமக்கு உள்ளே செல்ல அனுமதி அளித்தார்.கொஞ்ச தூரம் உள்ளே சென்றவுடன் நீர் தேக்க அணை பார்த்தோம்.மலைகளுக்கு இடையில் இந்த நீர் தேக்கம் அமைந்து இருக்கிறது.தண்ணீர் திறந்து விடும் இடம் நிறைய பாறைகளை கொண்டு இருக்கிறது.தண்ணீர் செல்லும் அழகே தனி.
 
 

  இங்கே தங்க ரூம் வசதி அனைத்தும் இருக்கிறது.பொதுப்பணித்துறையில் அனுமதி வாங்க வேண்டும்.பரந்த நீர் தேக்கத்தில் தண்ணீர் குடிக்க யானைகள், காட்டு எருமைகள் கூட்டம் கூட்டமாய் வருமாம்.நாங்க சென்ற போது நீர் தேக்கத்தின் அடுத்த பகுதியில் கூட்டம் கூட்டமாக காட்டு எருமைகள் நீர் குடிக்க வந்ததை பார்த்தோம்.நம்ம கேமராவில் ஜூம் வசதி அதிகம் இல்லை.இருந்தாலும் எடுத்து விட்டோம்.அணைக்கட்டில் நிறைய மீன் கிடைக்குமாம்.ஒருவர் மீன் பிடித்து கொண்டு இருந்ததையும் பார்த்தோம் நல்ல அருமையான சுற்றுலா இடம்.அமைதியான சூழ்நிலை.துளிகூட மாசு இல்லாத காற்று.மீண்டும் செல்லக் கூடிய ஏக்கத்தினை ஏற்படுத்தி விட்டது.
இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பல ஏக்கர்களுக்கு திறந்து விட படுகிறது.மேலும் ஒட்டன்சத்திரம் ஊரின் குடிநீர் தேவையை தீர்க்கிறது
          (அதோ தூரத்துல தெரியுது பாருங்க...அதுதான் காட்டு எருமைங்க.) 
            ( நல்லா பாருங்க...ஒருத்தர் மீன் பிடிச்சிட்டு இருக்கிறதை..)
இங்கே இருந்து இன்னும் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் பாச்சலூர் இருக்கிறது.எஸ்டேட்கள் மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறதாம்.பாச்சலூர் வழியே கொடைக்கானல் செல்லும் வழியும் இருக்கிறதாம்.கண்டிப்பாய் அடுத்த முறை போகணும்.இந்த ஊருக்கு வர மினி பஸ் இருக்கிறது.இயற்கையை விரும்புவர்கள், நேசிப்பவர்கள், கண்டிப்பா போகலாம்.
திண்டுக்கல்  மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து, பரப்பலாறு அணை  பாச்சலூர் செல்லலாம் 

நேசங்களுடன்
ஜீவானந்தம்

17 comments:

 1. மாப்ளே இங்க போய் நீருடன் நீராடலாமா முடியாதா?
  அல்லோ நீருடன் என்பது நீர் தான்

  ReplyDelete
 2. எலி மேட்டரில் தப்பித்தாலும் விடமாட்டம்ல

  ReplyDelete
 3. தாராளமா மாம்ஸ்...முன்னாடியே சொல்லி வச்சிட்டா போதும்..மீன், கறி எல்லாம் கிடைக்கும்..

  ReplyDelete
 4. புகைப்படங்கள் அருமை.!

  ReplyDelete
 5. பயபுள்ள தண்ணி இருக்குற இடமா சுத்துது....

  எப்படியோ எருமை மாடுகளை படம் புடுச்சு காட்டிட்டிங்க.

  ReplyDelete
 6. நன்றி வரலாற்று சுவடுகள்

  ReplyDelete
 7. தமிழ்வாசி...தண்ணி னா எனக்கு ரொம்ப பிடிக்கும்...நான் ஆறு குளம் ஏரிகள் சொன்னேன்....நல்லவேளை...என் போட்டோ போடல....

  ReplyDelete
 8. //நீருடன் நீராடலாமா முடியாதா?
  அல்லோ நீருடன் என்பது நீர் தான்// என்ன ஒரு ரைமிங்

  நானும் இந்த தளம் சென்று இருக்கிறேன்......பார்த்து ரசிக்க வேண்டிய இடம் தான் ............பாராட்டுக்கள் கோவை நேரத்திற்கு

  ReplyDelete
 9. புகைப்பட வித்துவான் ஜீவா வாழ்க...

  படங்கள் அருமை.தெரியாத இடம் தெரிந்து கொண்டேன்..

  தொடருங்கள்

  ReplyDelete
 10. மச்சி வண்டிய திருப்ப்பு

  ReplyDelete
 11. லோகேசன் படம் போடுது நண்பா

  ReplyDelete
 12. வந்த அனைவர்க்கும் நன்றி

  ReplyDelete
 13. படங்கள் காட்டும் இடங்களைப் பார்த்தாலே மனம் அமைதியடைகிறது.நேரில் பார்த்தால்!

  ReplyDelete
 14. அன்பு நண்பரே வணக்கம்.
  தங்களது பிளாக் பற்றி விகடனில் படித்து அப்போதே தங்களது பக்கம் வந்தேன்.அதில் எங்களது ஊர் பரப்பலாறு டேம் பற்றியும் பதிவிட்டு இருந்தீர்கள்.
  நான் பலமுறை பார்த்தவன்தான்.ஆனால் உங்களது எழுத்து நடை என்னை மறுபடியும் ஒரு முறை இரசிக்க வைத்தது.
  தங்களுக்கு எழுத்து நடை சரளமாக வருகிறது.இந்தக் கலையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
  மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது.
  வாழ்க வளமுடன்.
  snrmani@rediffmail.com

  ReplyDelete
 15. அடுத்த முறை வரும்போது தகவல் கொடுங்கள் நான் பழனியில் தான் இருக்கிறேன்

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....