Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++

சென்னையில் துவங்கவிருக்கிற இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமா கோலாகலமா நடக்கப்போகுது.இன்னும் ஒரிரு நாட்களே இருக்கு.எல்லாரும் தீயா வேலை செஞ்சிட்டு இருக்காங்க.அதிலும் முக்கியமான தலக்கட்டுகள்  பெரியவர் முதல் சிறியவர் அனைவரும் முன்னின்று ஏற்பாட்டை செஞ்சிட்டு இருக்காங்க.காலையில இருந்து மாலை வரைக்கும் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கு.கோவையின் பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.பிரபல பதிவர்களோட புத்தகம்லாம் ரிலீஸ் ஆகப்போகுது.அதில்லாம பதிவர்களோட தனித்திறன் நிகழ்வாக பாட்டு, டான்ஸ், கவிதை, நாடகம் இதெல்லாம் இருக்காம். (அப்படியே பக்கத்துல கேண்டீன் ஒண்ணு வச்சிருங்க சாமியோவ்...செமையா கல்லா கட்டிறலாம்..ஹிஹிஹி ) பயங்கரமா கச்சேரி களை கட்டப்போகுது.



சரி..சரி அதை விடுங்க.நம்ம மேட்டருக்கு வாங்க..மத்தியான விருந்துக்கு நான்வெஜ் அயிட்டமெல்லாம் போடறாங்களாம்.அதிலும் நமக்கு பிடிச்ச ஏகப்பட்ட வெரைட்டிகள் இருக்காம்.கடல்ல நீந்தறதுல கப்பலைத் தவிர, ஆகாசத்துல பறக்குறதுல விமானத்தைத் தவிர, ஓடறதுல பஸ் லாரி கார் தவிர, இப்படி எல்லா வகை உயிரினமும் இருக்காம்.ஓடறது போடறது கூட இருக்காம்...ஒரு புடி புடிச்சிட வேண்டியது தான் ஏன்னா இது நம்ம வீட்டு கல்யாணம்...(சாரி..ஒரு ஃப்ளோவுல வந்திடுச்சு... ) இது நம்ம வீட்டு விசேசம்... பூந்து விளையாடலாம்... இந்த சாப்பாட்டு விருந்துல என்னென்ன மெனு இருக்குன்னு தெரியல..எதுவா இருந்தாலும் சாப்பிடுவோம்...ஒரு வேளை கீழே இருக்கிறது எல்லாம் இருக்குமோ...

















உஸ்ஸ்...அப்பாடா...
இப்பவே கண்ணைக்கட்டுதே....
படங்களைப் பார்க்கையிலே
பசி நரம்புகள் சத்தமிடுதே...

சைவப் பிரியர்களே கவலைப்படாதீங்க எங்களைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க..உங்களுக்கும் வகை வகையாய் நிறைய இருக்கு, தயிர் சாதம், ஊறுகாய்ன்னு (அதுவும் பாண்டியன் மட்டை ஊறுகாய்) ஏற்பாடு செஞ்சி இருக்காங்களாம்..ஹிஹிஹி .....ஒரு பிடி பிடிச்சுகுங்க.


எல்லாரும் கண்டிப்பா வந்திடுங்க...ஒரு கை பார்த்திடலாம்..

கிசு கிசு : மத்தியான நேரத்துல என்னை எங்கயும் தேடாதீங்க கண்டிப்பா முத பந்தியில நான் இருப்பேன் ஹிஹிஹி...


பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்


நேசங்களுடன்
ஜீவானந்தம்


17 comments:

  1. பதிவர் திருவிழா சிறக்க
    என் அன்பார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. Mmmmmmmmmm.....super ! Waiting to see u all !

    ReplyDelete
  3. பக்கத்து சீட்டை காலியா வைங்க
    நான் உட்காரணும்
    கிரிகெட்டுல நல்ல பாட்னர் இருந்தால்தான்
    ரன் அதிகம் அடிக்கமுடியும்
    அப்படித்தான் சாப்பாட்டு விஷயமும்...
    பசி தூண்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Replies
    1. ஏ அப்பு சாப்பிடாமயே விக்கலா ?

      Delete
  5. காலை நேரத்தில்? இன்று முழுவதும் இதே நினைப்பு தான்.

    ReplyDelete
  6. ஓடறதுல பஸ் லாரி கார் தவிர
    >>
    அப்போ ஸ்கூட்டர் பிரியாணி, ஆட்டோ குழம்பு, சைக்கிள் கைமா, மாட்டு வண்டி ஃப்ரைலாம் போடுறாங்களா ஜீவா?!

    ReplyDelete
  7. கட்டிச்சோறு மூட்டையெல்லாம் ரூம்லேயே வைச்சுட்டு வாங்க

    ReplyDelete
  8. ரமணி சாருக்கு வலது புறம்னா,இடது புற சீட்டை எனக்கு போட்டு வைங்க ...ஏன்னா நான் பக்கத்து இலைக்கு நிறைய பாயசம் ஊற்றச் சொல்லி நல்லது செய்வேன் !

    ReplyDelete
  9. பதிவர் திருவிழாவில் கோவை நேரம் ஜீவா மூச்சு விடாம மூணு மணி நேரம் பேசப்போறாராம். ஸ்பெஷல் மைக் அரேஞ்ச் பண்ணுங்க...நிகழ்ச்சி அமைப்பாளர்களே.

    ReplyDelete
  10. ஆம குஞ்சும் அவிச்சி வெய்ப்பாங்களோ !

    ReplyDelete
  11. அந்த ஊருகாய நீ இன்னும் விடலியா ? !!

    ReplyDelete
  12. Non-Veg Package: Buffet set-up

    Grand Taj Chicken Biryani

    Onion Raitha

    Brinjal Chutney

    Chicken Tikka

    Pineapple Kaseri

    Ice Cream Cups (50 ml)

    Water (in Cups)
    Veg Package: Buffet set-up

    Grand Taj Veg Biryani

    Onion Raitha

    Brinjal Chutney

    Curd Rice

    Potato Chips

    Pineapple Kaseri

    Ice Cream Cups (50 ml)

    Water (in Cups)vc

    ReplyDelete

  13. இது நீயாம் அல்ல நான் வெஜ் ஆளுங்களுக்கு அவ்வளவி ஐட்டம் வெஜ் ஆளுங்களுக்கு ஒன்றே ஒன்றுதானா? வஞ்சனை வேண்டாம்

    ReplyDelete
  14. அன்பின் ஜீவா - பதிவர் சந்திப்புல இவ்வளவும் இருந்துச்சா - எதிர்பார்ப்பு அதிகம் தான் - நாங்க போக இயலவில்லை - அதனாலே தெரியல - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....