Monday, August 26, 2013

பயணம் - சிங்கப்பூர் - EAST COAST PARK (ECP) - SINGAPORE, குடில் டேட்டிங், சைக்கிளிங், நீச்சல், பொழுது போக்கு

         ஒரு மதிய வேளை...மனதுக்கு இதமான இடத்துக்கு போவோம் என்றெண்ணி போனது இந்த East coast park பீச்சுக்கு.சிங்கப்பூரின் பெடோக் பகுதிக்கு அருகில் இருக்கிற இந்த பீச்சில் நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்துணர்ச்சி அடைந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது.பொழுது போக்காய் மீன் பிடித்தல், பட்டம் விடுதல், நீச்சலடித்தல், வாட்டர் சர்ஃபிங், சைக்கிளிங், ரோலர் ஸ்கேட்டிங், கேம்ப் எனப்படும் குடில்கள்,நடைபயணம், மனம் ரிலாக்ஸ் ஆக பீச், குடும்பம் குடும்பமாய் கும்மியடிக்க பார்பிகியூ இடங்கள் என எல்லாமாய் இருக்கிறது.




                   பரந்து விரிந்து கிடக்கும் கடலினைப் பார்த்துக்கொண்டே ஓரு ஓரமாய் நடந்து செல்கையில் முதலில் கண்ணில் பட்டது இந்த குடிசைகள் சாரி குடில்கள் தான்.பச்சைப்புல்வெளியில் பசுமையான மரங்களுக்கு அடியில் ஆங்காங்கே நீல கலரில் குடில்கள் வியாபித்து இருந்தன.( நீலக்கலர் என்றதுமே அப்போது அது ஞாபகத்திற்கு வரவில்லை.) ஒரு வேளை நாடோடிக் கூட்டங்கள் தான் நட்டு வைத்து இருக்கின்றனரோ என ஒரு ஆச்சர்யத்தில் நண்பரைக் கேட்க அவர் சொன்னது இன்னும் படு ஆச்சர்யம்.வீக் எண்ட் களில் தள்ளிக்கொண்டு, அள்ளிக்கொண்டு, கட்டிக்கொண்டு, ஓட்டிக்கொண்டு (இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கோ ) தனிமையைத்தேடி வரும் ஜோடிகள் சல்லாபிக்க சரசமாட சாரி பேசிக்கொள்ள அப்புறம் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள பிரைவசி வேண்டி கட்டிக்கொள்ளும் குடில்கள் தான் அவை.




             எந்த தொந்தரவும் இல்லாமல் போலீஸ்க்கு பயப்படாமல், லாட்ஜ்களுக்கு செலவளிக்காமல் திறந்த வெளியில் குடில் அமைத்து தங்களை புதுப்பித்துக்கொள்ளும் / உணர்ந்து கொள்ளும் இடமாக குடில்களை அமைத்து சல்லாபித்துக்கொண்டு இருக்கின்றனர் கொடுத்த வைத்த குடிமக்கள்.இதுக்கு பேரு தான் குடில் டேட்டிங்கா...? குடில் விலை ஒரு சில டாலர்களில் அடங்கிவிடுவது மட்டுமே.அப்புறம் அம்மணிகளுக்கு பண்ற செலவு தவிர மத்தபடி எந்த செலவுமில்லை.ஆக மொத்தம் குறைந்த விலையில் நிறைந்த சுகம்.கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு கடக்கையில் குடிலின் அசைவுகள் நம் உணர்வுகளை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.



        நம்மூர்லயும் இந்த மாதிரி வசதிகள் வந்துவிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.ம்ம்ம்..ஒரு ஏக்கப்பெருமூச்சுதான்....தினத்தந்தி பேப்பரில் வர்ற மாதிரி நிறைய அசைவ செய்திகள் இருக்காது.70 வயசு கிழவியை கெடுத்தது, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது, அப்புறம் அங்க அவன் கெடுத்தான் இங்க இவன் கெடுத்துட்டான்னு பக்கம் பக்கமா நிச்சயமா நியூஸ் வராது.அதே சமயம் நம்மூர் சட்டம் கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டும்.கண்டிக்க, தண்டிக்க, துண்டிக்க பாரபட்சம் காட்டாமல் இருந்தால் இதுவும் சாத்தியமே.

      அப்படியே பேசிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நோட்டமிட்டதில் இந்த பீச் மிக சுத்தமாக இருக்கிறது.எந்த வித அசுத்தங்களோ, குப்பைக்கூளங்களோ இல்லை. பீச் ஏரியாவில் இந்த குடில்கள்  நிறைய இருந்தாலும் அம்மக்களை யாரும் எந்த வித தொந்தரவும் செய்யாமல் இருக்கின்றனர். குடில் இல்லாத மக்கள் குடும்ப குடும்பமாய் அடுப்பு மூட்டி பார்பிக்யூ சமையல் செய்து களிக்கின்றனர்.இன்னும் நிறைய பேர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பீச்சினை வலம் வருகின்றனர்.இதற்காகவே சைக்கிள் வாடகைக்கு விடும் இடமும் இருக்கிறது.பேமிலி சைக்கிள் எனப்படும் ஒரு சைக்கிளில் குடும்பமே குதூகலமாக பீச்சினை சுற்றி வருகின்றனர்.







            ஒரு சிலர் பட்டம் பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலர் கடலில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.நம்மளை மாதிரி ஆட்கள் உலாவரும் அம்மணிகளை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் கண்டபடி இன்னும் சிலர்.இப்படி ஒவ்வொருவரும் அமைதியான மாலைப் பொழுதினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலவிடுகின்றனர். 


       
           நன்றாக திட்டமிட்டு மீன்பிடிக்க இடம், வாட்டர் ஸ்கை செய்ய இடம். புல்வெளிகள், சைக்கிள் ஓட்ட பாதை, நடக்க ஒரு பாதை, மரங்கள், சமைத்து சாப்பிடுவர்களுக்கு டேபிள் என அமைத்து இருக்கின்றனர்.



               எல்லாம் ஆற அமர்ந்து பார்த்து ரசித்தபின் நாங்களும் கடலில் குதித்து எங்கள் களியாட்டத்தினை ஆரம்பித்தோம்.(ம்ம்ம்.என்ன பண்றது எங்களுக்குத்தான் குடில் இல்லையே..ஹிஹிஹி ).

               கடலில் குளித்த பின் நல்ல தண்ணீரில் குளிக்க தனித்தனி ஷவர் வைத்து இருக்கின்றனர்.அங்கேயே உடை மாற்றும் அறைகளும் இருக்கின்றன.டாய்லட் வசதிகளும் இருக்கின்றன.ஆனா நம்ம ஊர் பீச் களை நினைக்கையில் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.நம்ம கவர்மெண்ட்டுக்கு அவ்ளோ தான் முடியும்.மக்கள் தொகைப்பெருக்கம், லஞ்சம், ஊழல் என எல்லாம் பெருகி இருக்கும் போது என்னத்த செய்யுறது..என்னத்த சொல்றது....

                 இருட்ட துவங்கியவுடன் நடையைக்கட்ட ஆரம்பித்தோம்.செல்லும் போது குடில்களை பார்க்கின்ற போது ஒரு ஏக்கப்பெருமூச்சு வெளிவந்தது என்னவோ உண்மைதான்...ஏன்னா நம்மூர்ல தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு, (முடிஞ்சா கற்பையே பறிப்பு), பீச்சில் காதலர்களிடையே போலீசார் மாமூல் வசூல், மகாபலிபுரம் ஈசிஆர் ரோட்டுல போற வர்ற காதலர்கள்கிட்டே வண்டியை மறிச்சு பணம் வசூல் இப்படி நடக்கிறத பார்த்தா சிங்கப்பூர் குடில் வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்.

கிசுகிசு : குடிலுக்குள்ள தான் போக முடியல...அட்லீஸ்ட் அதுக்கு முன்னாடியாவது நின்னு போட்டோ எடுத்துக்கலாமே அப்படின்னு சிங்கப்பூர் நண்பருடன்.....

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்


ஜீவானந்தம்


30 comments:

  1. nice msg and photo's kovai neram....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..என்னது மெசேஜா...அப்படி ஏதாவது இருக்கா...?

      Delete
  2. ஜீவா பாடி லாங்குவேஜை பாத்தா...
    ‘யார்றா அது...பண்ணிக்குட்டி ராமசாமியா?...
    என்று சொல்வது போல இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றீங்க.. எனக்கென்னமோ "தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி" தான் ஞாபகத்துக்கு வருது!!

      Delete
    2. ஏன்..ஏன்..இந்த கொலவெறி மிஸ்டர்களே...ஒரு வருங்கால ஹீரோவ (?) இப்படியெல்லாம் சொல்லப்படாது...

      Delete
  3. மூணு முறுக்கு வாங்கும் காசுக்கு...
    பொண்ணு கிடைக்கும் மும்பையிலேயே...
    கற்பழிப்பு நடக்குதே!

    ReplyDelete
    Replies
    1. மூணு வரி. ஒவ்வொரு வரியின் கடைசியிலும் மூணு புள்ளி. கடைசி வரியின் முடிவில் ஆச்சர்யக் குறி.. அட உலக சினிமா ரசிகன் கவிதா கூட சாரி கவிதை கூட எழுத ஆரம்பிச்சுட்டாரா??

      Delete
    2. சார்..ரொம்ப சீப்பா இருக்கே...நான் விலையை சொன்னேன்,,,தப்பா எடுத்துக்காதீங்க...

      Delete
    3. மச்சி நஸ்ரியா மச்சி...கவிதா சாரி கவிதை தெரியுமா...

      Delete
  4. //ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள பிரைவசி வேண்டி கட்டிக்கொள்ளும் குடில்கள் தான் அவை.
    //

    இத விட தெளிவா எழுத முடியாது மாப்ளே..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப விம் போட்டுட்டனா...

      Delete
  5. படங்களுடன் பதிவு அருமை
    நேரடியாகப் பார்ப்பதைப்போன்று
    அருமையாகப் பதிவு செய்தமைக்கும்
    தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்...உங்க வருகை ஆச்சரியப்படுத்துகிறது.

      Delete
  6. குடிலின் அசைவுகள்...! Note this point....!

    ReplyDelete
    Replies
    1. தி.த...விவரமா இருக்கீங்க...

      Delete
  7. குடிலுக்குள்ள தான் போக முடியல.
    >>
    இந்த மாதிரி பசங்களை கூட்டி போனா எப்படி?! வூட்டம்மாவை கூட்டி போயிருந்தா போயிருக்கலாமே!

    ReplyDelete
  8. //கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு கடக்கையில் குடிலின் அசைவுகள் நம் உணர்வுகளை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.// D.D நோட் பன்னிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மெரினா பீச் வேஸ்டா ?

      Delete
    2. ரெண்டு பேரும் விவரமாத்தான் இருக்கீங்க...

      Delete
  9. சமையல் செய்வது யாருங்க ஆண்களா ? இது நல்லா அப்படின்னா போகலாம் குடும்பத்தோட...

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் குடும்பத்தோடு தான் வராங்க...ஜாலியா இருக்காங்க..

      Delete
  10. அழகான இடம். பேமிலி சைக்கிள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..சைக்கிள் மட்டுமா...

      Delete
  11. நல்லாத்தான் இருக்கு!நம்க்கு அதுக்கெல்லாம் வாய்ப்பில்லே!

    ReplyDelete
    Replies
    1. ஏன் பாஸ்..ஏன் வாய்ப்பில்ல...?

      Delete
  12. மச்சி.... போட்டோஸ் செம...

    குடில், கொஞ்சம் டாலர் தானே???? ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஆமா...முஸ்தபா செண்டரில் 27 டாலர்னு நினைக்கிறேன்..

      Delete
  13. வேட்டைக்காரன்August 31, 2013 at 4:59 PM

    //நம்மூர்லயும் இந்த மாதிரி வசதிகள் வந்துவிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.ம்ம்ம்..//

    பாஸ் இந்த மாதிரி camping tent இப்ப நம்மூரிலும் கிடைக்குது. myntra.com flipkart.com தளங்கள்ல ரூ.5000க்கு கிடைக்குது. ஆனா http://www.bigredtent.in/ போல கேம்ப்க்ரவுண்டுகள்தான் கோவை அருகே இல்லை.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....