Sunday, February 27, 2011

கோவை மெஸ் - கரம்

கரம்



கரூர்ல டெக்ஸ்டைல், பைனான்ஸ் இது மட்டுமல்ல கரமும் பேமஸ்.எல்லா இடங்களிலும் தள்ளு வண்டியில வச்சி இருப்பாங்க.முட்டை கரம் ரொம்ப பேமஸ்.வெங்காயம், 5 வகை சட்னி, மிக்சர், முறுக்கு , அவிச்ச முட்டை, பொரி போட்டு கொடுப்பாங்க .ரொம்ப அருமையா இருக்கும்.வெஜ் கரமும் உண்டு.அப்புறம் செட் . இது ரெண்டு தட்டு வடையின் இடையில வெங்காயம், 3 சட்னி வச்சி கொடுப்பாங்க .அப்படியே வாங்கி லபக் குனு வாய்ல போட்டு கடிச்சு தின்னா ஐயோ...இப்பவே எச்சில் ஊறுதே ....நான் எப்போ போனாலும் மறக்காம சாப்பிட்டு தான் வருவேன் .அவ்ளோ அடிமை. 1987 ல சாப்பிட ஆரம்பிச்சேன்..இப்போ வரைக்கும் தொடருது ...

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

இன்னும் கொஞ்சம்...

Friday, February 25, 2011

கோவை மெஸ் - பணியாரம், செம்பட்டி.

பணியாரம்



இது மதுரை போகும் போது செம்பட்டி பக்கம் ஒரு சின்ன கடையில பணியாரம் வித்துட்டு இருந்தாங்க.ரொம்ப நல்லா இருந்தது .விலையும் ரொம்ப கம்மியா இருந்துச்சு.என்ன ...கொஞ்சம் சைஸ் பெரிசு ..மூணுக்கு மேல சாப்பிட முடியல.இதுக்கு கொத்தமல்லி சட்னி அப்புறம் சாம்பார் தந்தாங்க ...அருமை ..விறகு அடுப்புலதான் பண்றாங்க..ஒரு ஈட்டுக்கு 19 பணியாரம் கிடைக்குது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 23, 2011

தஞ்சை

தஞ்சை ...நம்ம பெரிய கோவில்


...உங்களுக்கு இதை பத்தி எல்லாம் தெரியும் ..நான் போனது ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க முடிவு செஞ்ச பின்னாடி ...ரொம்ப சுத்தமா இருந்தது.அப்புறம் நம்ம கலைஞர் கொல்லை புற வழியா போயி இந்த விழாவுல கலந்து கிட்டாருனு கேள்வி பட்டேன் .எப்படியும் அவர் அடுத்த ஆட்சிக்கு வரமாட்டார்.பின்ன ஏன் கொல்லை புற வழியை தேர்ந்தெடுத்தார் ன்னு தெரியல .
இன்னும் கொஞ்சம்...

முக்கொம்பு

இந்த அணை முக்கொம்புல இருக்கு


.திருச்சி டு கரூர் செல்லும் சாலையில் காவிரி கரை ஓரமாய் இந்த பிக்னிக் ஸ்பாட் இருக்கு . ரொம்ப முக்கியமான சுற்றுலா தலம்.திருச்சி மக்களுக்கு ஒரு வரப்ரசாதம்.அதே மாதிரி நம்ம காதல் ஜோடிகளுக்கு ஏத்த இடம் ...
இன்னும் கொஞ்சம்...

Monday, February 14, 2011

வ.உ.சி பார்க்

போன வாரம் நம்ம வ.உ.சி பார்க் போனோம்.
எப்பவும் போல காதலர் கூட்டம் தான்.அப்புறம் அங்க இருக்கிற விலங்குகள் எல்லாம் பார்த்தோம்.


பாவமா இருந்துச்சு.அடைச்சு வச்சு ரொம்ப கொடுமை படுத்துறாங்க.
சிங்கம் புலி காண்டா மிருகம் தவிர எல்லாம் இருக்கு



சரியான பராமரிப்பு இல்ல.டிக்கட் விலை 3 ரூபாதான்.கொஞ்சம் கூடுதல் பண்ணி நல்லா பராமரிக்கலாம் ...
இன்னும் கொஞ்சம்...

கோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, 100 அடி ரோடு,, கோவை

திண்டுக்கல்  வேணு பிரியாணி - நூறடி ரோடு, கோவை

இந்த ஹோட்டல்ல எப்பவுமே கூட்டமா இருக்கும்.ரொம்ப டேஸ்டா இருக்கும்.இன்னிக்கு மதியம் அங்கதான் சாப்பிட்டேன்.
கோலா உருண்டை இங்க ரொம்ப நல்லாருக்கும்


இந்த கடை கோவைக்கு வந்து ஒரு வருடம் தான் ஆயிருக்கும்.நல்லா பேமஸ் ஆயிடுச்சு.இன்னும் நிறைய ஹோட்டல் இருக்கு ஆனா நல்லாருக்காது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

அருவி - மூணாறு

ஆலுவா லிருந்து மூணார் போற வழியில ஒரு அருவி இருக்கு.ரோட்டு ஓரத்திலேயே இருக்கு.



தண்ணீர் சும்மா சில்லுனு முகத்தில பட்டு தெறிக்கும்.அவ்ளோ நல்லா இருக்கும்.
அருவி பேரு என்னனு தெரியல.ஆனா 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அங்க இறங்கி நின்னு போட்டோ எடுத்து கிட்டேன்.ரொம்ப கடை இல்ல. மொத்தம் 3 கடை தான் இருக்கு. கூட்டம் அதிகமா இல்ல.அங்க அன்னாசி பழ துண்டுகள், அப்புறம் மாங்காய் போட்டு வச்சிருந்தாங்க .ரொம்ப டேஸ்டா இருந்துச்சு.குளிருக்கு இதமா இருந்தது.


அங்க இருக்கிற மக்கள் யாரும் இயற்கையை விரும்பல போலிருக்கு.ஒருவேள அவங்களுக்கு பழகி போய் இருக்கலாம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

காதல்

இஞ்சினீரிங் படிக்கும்
என்னவளுக்கு
இதயத்தை
இரும்பாய் படைத்து விட்டான்
இறைவன்
அதனால் தான் என்னவோ
இளக வில்லை
இன்னும்...




நான் லவ் பண்ணும் போது கிறுக்கியவை
இன்னும் கொஞ்சம்...

ஆலுவா

கேரளா போய் இருந்தேன்.ஆலுவா.

நான் ரயில்ல வந்து இறங்கின அப்புறம் போட்டோ எடுத்தேன் .


கொச்சின் பக்கத்துல இருக்கு.இந்த ஊருல ரெண்டு ஆறு பாய்ந்து ரொம்ப அழகா இருக்கு. நல்ல பசுமையா இருக்கும்.இங்க இருந்து கொச்சினுக்கு ஜஸ்ட் 20 கிலோ மீட்டர் தான்.கொச்சின் ல செராய் பீச் இருக்கு.அரபிக்கடல் தான்



.பார்த்தா பரந்து விரிந்து கிடக்கும்.அப்புறம் இங்க மீன் நல்ல சுவையில் கிடைக்கும்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 9, 2011

ஸ்ரீ பத்ர காளி அம்மன் - மேட்டுப்பாளையம்

 ஸ்ரீ பத்ர காளி அம்மன்
போன ஞாயிறு நாங்க மேட்டுப்பாளையம் கோவிலுக்கு போனோம்.





என்ன கிடாவெட்டு தான்.
நல்ல இடம் ..சுத்தியும் பாக்கு மரம் , நல்ல குளிர்ச்சியா காத்து, பசுமையான மரங்கள் ...


நல்லா என்ஜாய் பண்ணினோம் .அப்புறமா பவானி ஆத்துக்கு போனோம்


தண்ணீர் வரத்து கம்மியா இருந்தது.குளிக்கலாம்னு இருந்தோம.கொஞ்சம் பயமா இருந்தது .ஏன்னா தண்ணிக்குள்ள வச்சி அமுத்தி கொலை பண்ணிடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன்.பொணத்த பாறை இடுக்கில ஒளிச்சு வச்சி பின்ன காசு அதிகமா பேரம் பேசி எடுத்து தருவாங்களாம்.இப்படியும் ஒரு ஈன தொழில் இருக்கே ...

நேசங்களுடன் 
ஜீவானந்தம் 



இன்னும் கொஞ்சம்...

Monday, February 7, 2011

டிரைவிங் லைசன்ஸ் - அனுபவம்

சரோஜா தேவி கதைன்னு நினைச்சு வந்தவங்க கிட்டே மன்னிப்பு கேட்டுகிறேன்
இன்னிக்கு ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க போனேன் .என்னோட முகவரி மாத்தணும்னு அதுக்காக .அப்படியே கொஞ்சம் வழிமுறைகளையும் சொல்லிவிடுகிறேன்.உபயோகமா இருக்கும் உங்களுக்கு.என்னோட ஏரியா துடியலூர் பக்கம் அதனால வடக்கு மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம்.
உள்ளே போனா நம்ம டாஸ்மாக் மாதிரியே இருக்கு.


அஸ்பெஸ்டாஸ் அட்டை போட்ட கூரை, அப்புறம் சிமெண்ட் பெஞ்சு, கடப்பா கல்லு , அப்படியே நம்ம கடையை ஞாபக படுத்தி விட்டது
ஐயையோ ...ஞாபக படுத்தி விட்டேனா ....
ஓகே .விஷயத்து வருவோம். முகவரி மாற்றம் / உரிமம் புதுப்பித்தல் பண்ண படிவம் 9 .புதிய உரிமம் பெற படிவம் 4 படிவம் 8 .
முதல்ல படிவம் 9 வாங்கி , நிரப்பி கையெழுத்து போட்டேன்.ஒரு வெள்ளை தாள்ல விண்ணப்பம் எழுதி ரேசன் கார்டு ஜெராக்ஸ்
ஒரிஜினல் லைசென்ஸ் இதை இணைத்து கொண்டேன்.அப்புறம் இதையெல்லாம் கம்ப்யூட்டர் மூலம் என்ட்ரி பண்றவங்ககிட்டே கொடுத்து நம்பர் வாங்கிக்கணும் .அப்புறம் 315 ரூபாய் பணம் கட்டி ரசிது வாங்கி,அந்த ரசிதை பாதி கிழிச்சு விண்ணப்பத்தில ஒட்டி எல்காட் ஆபீஸ் கிட்டே கொடுத்து போட்டோ எடுத்துகிட்டேன்.அப்படியே இ கையொப்பம் போட்டேன் (போட்டோ எடுக்கையிலே ரெண்டு துணி வச்சிருந்தாங்க நீலம் மற்றும் சிகப்பு .சிகப்பு துணி ஹெவி மோட்டார் வண்டி ஆளுங்களுக்காம்.) ஒரிஜினல் ரேஷன் கார்டை அவங்ககிட்டே காட்டி முகவரி மாற்றம் பற்றி சொல்லிடனும்.கொஞ்சநேரத்துல டுப்ளிகேட் தருவாங்க .அதுல எதாவது தப்பு இருந்தால் சொல்லி மாத்திக்கலாம்.அப்புறம் ஒரிஜினல் லைசென்ஸ் தந்தாங்க. வாங்கிகிட்டேன்.10 மணிக்கு போயி 11 .30 மணிக்கு வந்துட்டேன்.எப்பவும் போல நம்ம ஆபிசரு லேட்டாதான் வந்து கவுண்டரை ஓபன் பண்ணினாங்க.(11 .30 மணி வரை தான் பணம் கட்ட முடியும்) .இல்லேனா சீக்கிரமா வந்திருப்பேன்.

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...