Wednesday, June 6, 2012

கோவை மெஸ் - பாண்டியன் மட்டை ஊறுகாய்

நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற அண்ணாச்சி கடைக்கு போனேன்.நம்ம பிராண்ட் ஆன பாண்டியன் மட்டை ஊறுகாய் பார்த்தேன்..ஆகா...பதிவுக்கு மேட்டர் கிடைச்சாச்சு..... (பதிவுக்கு மட்டுமல்ல..ஹி ஹி ஹி )..என்கிற சந்தோசத்துடன் வாங்கி வந்தேன்.
அதே சுவை..அதே மனம்...ஆனால் கொஞ்சம் விலை ஏற்றத்துடன்.....
காய்ந்து போன இலை மட்டையில் மிக சுவையுடன் எலுமிச்சை ஊறுகாய். இது வரைக்கும் அது என்ன இலை என்று தெரியவில்லை. எவ்ளோ நாள் வைத்து இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது இதன் தனிச்சிறப்பு.




பத்து வருடங்களுக்கு முன்னால் சாப்பிட்ட அதே சுவையுடன் இன்னும் இருக்கிறது இந்த ஊறுகாய். நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய போது இது இல்லாமல் இருந்ததில்லை.பழைய சாதம் சாப்பிடும் போதும் இது இல்லாமல் இறங்குவது இல்லை.அப்படி ஒரு சுவையில், மனதில் இடம் பிடிக்கிறது இந்த ஊறுகாய்.நம்மள மாதிரி குடிமகன்ளோட ஒரே சாய்ஸ் இது தான். அதிக செலவில்லாத வயிற்றுக்கு கேடில்லாத ஒரு அருமையான சைடு டிஷ் என்பதில் இது சந்தேகமே இல்லை. (ஆனா இது நம்ம டாஸ்மாக்ல கிடைக்காது என்பது வேற விஷயம்)
எத்தனையோ ஊறுகாய் கம்பெனிகள் வந்து இருந்தாலும் இதன் சுவைக்கு எதுவுமே ஈடாவதில்லை. இதை வாங்க நீங்க ரொம்ப அலைய வேணாம். கோவைல இருக்கிற எல்லா அண்ணாச்சி மளிகை கடை, சந்துல பொந்துல இருக்கிற எல்லா பொட்டி கடையிலும் இது கிடைக்கும்.விலை இப்போ இரண்டு ரூபாய்க்கு கிடைக்கிறது. கொஞ்சம் அதிகமான ஊறுகாய் உடன்.....மதுரை மண்ணில் இருந்து வெளி வருதுன்னு நினைக்கிறேன்....குடிசை தொழில் தயாரிப்பில் இது முதலிடம் என்பது சந்தேகமே இல்லை.

கிசுகிசு : நான் ஏதாவது ஞாபகம் படுத்தி விட்டேனா....கை எல்லாம் நடுங்க ஆரம்பிக்குதா.....


நேசங்களுடன்  
ஜீவானந்தம்

13 comments:

  1. Sir, Oorugaai has more salt & more salt is not good for health.

    ReplyDelete
  2. வணக்கம்.ரொம்ப நன்றி..அப்புறம் சார் லாம் வேணாமே...உங்களை விட அனுபவத்தில் வயதில் இளையவன் ..

    ReplyDelete
  3. jeeva,

    adayar anandha bhavan patri eludhungal please.

    ReplyDelete
  4. Mapla Selvam brand Narthankai Uruka try panni paru. Thoothukudi famous. Pichi yeriyum

    ReplyDelete
  5. மச்சி சரக்கடிக்க நல்ல சைட் டிஷ் சொல்லி இருக்க, அப்படியே வாட்டர் பாக்கெட், ஒன் யூஸ் டம்ளர்னு எந்தெந்த பிராண்ட் நல்லா இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க :-)

    ReplyDelete
  6. ஹாய் ஜீவா...

    இந்த ஊறுகாய் மதுரைக்கு பக்கத்துல கொடைரோட்டில் உற்பத்தி ஆகுது..

    நீங்க சொன்னது மாதிரி பழைய களி சோற்றுடன் தயிர் கலந்து பாண்டியன் ஊறுகாயுடன் சாப்பிட்டா அப்பப்பா..சுவையே அலாதிதான்...

    ReplyDelete
  7. சைடு டிஷ் இருக்கு. மெயின் டிஷ் எங்கேய்யா?

    ReplyDelete
  8. வாங்க இரவு வானம்...எதுக்கு தனி தனியா...நாம டாஸ்மாக் போகலாம்...எல்லாம் கிடைக்கும்...

    ReplyDelete
  9. சம்பத்..தகவலுக்கு நன்றி..களி க்கு சாப்பிட்டா அருமை...உண்மைதான்

    ReplyDelete
  10. @பிரகாஷ்....மெயின் டிஷ் போட்டா ..எல்லாரும் பங்குக்கு வந்துடுவாங்க...

    ReplyDelete
  11. ""நான் ஏதாவது ஞாபகம் படுத்தி விட்டேனா....கை எல்லாம் நடுங்க ஆரம்பிக்குதா.....""

    இனிமேல் இந்த மாதிரி பதிவு போடும்போது எங்கள கவனிச்சுட்டு எழுதுங்க !

    நாக்குல ஊருது காரம்

    வரும் போது 10 பாக்கெட் ஊறுகா வாங்கிட்டு வாங்க

    ReplyDelete
  12. நல்ல காரமான ஊறுகாய் பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அந்த இலைக்கு பெயர் மந்தாரை

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....