Monday, November 12, 2012

வெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4

ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் முடித்து விட்டு வந்து சேர்ந்த இடம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர்.ஓங்கி உயர்ந்த, பளபளப்பான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கட்டிடங்கள், அடுத்து அடுத்து தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் என ஊர் முழுக்க உயர்ந்த கட்டிடங்கள்.நம்ம ஜெய் பார்த்த மாதிரி அதாங்க பட்டி காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கி கொண்டது தான் மிச்சம்.









முதலில் சென்ற இடம் கேஎல் டவர்.இது மலேசியாவின் முக்கிய லேண்ட்மார்க் ஆக இருக்கிறது.இந்த டவர் மலேசியாவின் தொலை தொடர்பு மற்றும் ஒளிபரப்பு விசயங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.ஒரு மலை மீது 421 மீட்டர் உயரத்தில் இது அமைக்க பட்டு இருக்கிறது.இதன் மேலே சென்றால் ஒட்டு மொத்த கோலாலம்பூர் அழகையும் காணலாம்.
அப்புறம் சென்ற இடம் ட்வின் டவர்.பெட்ரோனாஸ் டவர் என்று அழைக்கப்படும் ரொம்ப உயரமான கட்டிடம்..அண்ணாந்து பார்க்கவே முடியல...அவ்ளோ உயரம்...இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது. இரண்டிற்கும் இடையே இணைப்பு பாலம் வேறு உயரத்தில் இருக்கிறது.(451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது).மேலே செல்ல வில்லை.அங்கிருந்து பார்த்தால் இன்னும் அழகாக தெரியும் கோலாலம்பூர்.

 
 
 அடுத்து சென்றது இஸ்தானா நெகரா எனப்படும் அரண்மனைக்கு.மலேசியா அரசின் மன்னராட்சி முறை இன்னும் இருக்கிறது என்பதற்கு இந்த அரண்மனை ஒரு எடுத்துக்காட்டு.பரந்து விரிந்து இருக்கிறது.உள்ளே செல்ல வில்லை.வெளியே  இருந்து பார்த்து ரசித்தோம்.

அப்புறம் இன்னும் ஒரு சில இடங்கள்.அப்படி ஒன்றும் அதிகம் ஈர்க்கவில்லை.மலேசியாவை உருவாக்கியவர்களுக்காக நினைவு சின்னம் இருக்கும் இடம் அங்கு ஒரு சில போட்டோக்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றோம்.


மலேசியாவில் கண்டு களிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட முடியாது போல.ரெண்டு மூணு மாசம் வேணும்.ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட வேண்டும்.எனது பயணம் மலேசியா கோலாலம்பூர் சுற்றியே அமைந்து இருந்தது.அதனால் குறைவான இடங்களை பார்க்க நேரிட்டது,மீண்டும் செல்ல கூடிய ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.மிக முக்கியமான இடங்கள் நிறைய இருக்கின்றன.விரைவில் வாய்ப்புகள் வரும் என்றே நினைக்கிறேன்.

கிசுகிசு : இந்த பதிவிலும் அம்மணிகள் பத்தின வார்த்தைகள் இடம் பெறவில்லை...ஹி ஹி ஹி

நேசங்களுடன்
 ஜீவானந்தம்.

16 comments:

  1. படங்கள் எல்லாம் சும்மா நச்சுன்னு தூக்கலா இருக்கேய்யா சூப்பர்ப்...!

    ReplyDelete
  2. எங்க ஊர் எங்க ஊர்!படங்கள் சூப்பர்.ஆனால் ஒரு பெயரைத் தப்பாக சொல்லியிருக்கிங்க சகோ.அது ஜெண்டிங் ஹைலண்ட் இல்லை,கெந்திங் ஹைலண்ட் என்று சொல்லனும் ,சூதாட்டத்துக்கு பேர்போன குளு குளு இடம் .சீனர்களின் சொர்க்கபூமி.

    ReplyDelete
  3. கலக்கல் மாப்ளே

    (விரைவில் தனிபதிவா...எதிர் பாக்குறோம்....ஹி ஹி)

    ReplyDelete
  4. படங்கள் அருமை... ரசித்தேன்...

    ReplyDelete
  5. இந்த பதிவிலும் அம்மணிகள் பத்தின வார்த்தைகள் இடம் பெறவில்லை...ஹி ஹி ஹி

    தொடர்ந்து மூனாவது பதிவு ஹாட் ட்ரிக் சாதனை......

    ReplyDelete
  6. படங்கள் அனைத்தும் மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. //கிசுகிசு : இந்த பதிவிலும் அம்மணிகள் பத்தின வார்த்தைகள் இடம் பெறவில்லை...ஹி ஹி ஹி ///

    இந்த வாக்கியம் என்னை மிகுந்த மனஉளைச்சலில் தள்ளியதால், கூப்டுறா சைபர் கிரைம் போலீச! போடுறா கேச!

    :))

    ReplyDelete
  8. வானுயர்ந்த கட்டிடங்கள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடும்.

    பெட்ரோனாஸ் டவரில் ‘அரை டிராயர் அம்மணிகள்’ நடமாட்டம் ஜாஸ்தியா இருக்குமே !
    சென்சார் பண்ணிட்டிங்களா!

    ReplyDelete
  9. தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லாம் வளமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. அழகான பதிவு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  12. ரொம்ப பெருமையடிச்சுக்காதீங்க ஜீவா! அதான் கிசு கிசுல வந்துடுச்சே?!

    ReplyDelete
  13. மச்சி.. நல்ல பதிவு.. அழகான புகைப்படங்கள்..

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் - நன்றி.

    ReplyDelete
  15. சூப்பர் மச்சி என்ஜாய்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....