எனது கல்லூரி
நண்பனும், ஆவிப்பா எழுதி நம்மை கதிகலங்க வைக்கும் நண்பரும், பதிவுலகில் பேய்,
பிசாசு என அழைக்கும் கோவை ஆவியுமான, கோவை மாவட்ட நஸ்ரியா ரசிகர் மன்ற தலைவரும்,
உடல் பொருள் ஆவி என அனைத்தும் நஸ்ரியாவிற்கே என எழுதிக்கொடுத்திருக்கும் கோவை ஆவிஎன்கிற ஆனந்த் போன சனிக்கிழமை அன்னிக்கு பொள்ளாச்சி
போகும் போது ஏதோ காத்து கருப்பு (ஆவிக்கேவா....) அடிச்சிருக்கும் போல....(அனேகமா
மரியான் ன்னு நினைக்கிறேன் ) திடீர்னு பிரேக் பிடிச்சதால் வண்டியில இருந்து பறந்து
போய் கீழே விழுந்து தன் இரண்டு கைகளிலும் விழுப்புண்ணை (விழுந்து + புண்ணை ) ஏந்தியிருக்கிறார்.நல்லவேளை
ஹெல்மெட் அணிந்திருக்கிறார் இல்லை எனில் மொட்டைத்தலை
சிதறு(தலை)தேங்காய் ஆகிருக்கும்.(தயவு செய்து வண்டியில் செல்பவர்கள் ஹெல்மெட்
அணியுங்கள்).அதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நலமின்றி இருக்கிறார்.
அவர்
உடல் நலம் தேறி மீண்டும் ஆவிப்பா எழுத வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.மச்சி சீக்கிரம் வா ...உனக்கு சத்ரியன், பரதன், குமரன் S/o மஹாலட்சுமி, விஜய் நடிச்ச பத்ரி, இந்த படங்களில் இருந்து ஒரு பாட்டு அனுப்பறேன்.
அதை கேட்டு சீக்கிரம் குணமாகு..
மச்சி...ஆப்ரேஷன்
லாம் பண்ற...எப்போ ட்ரீட்...ஹிஹிஹி
*********************************
மினி பதிவர்
சந்திப்பு..
நெல்லையின் ஆபிசர் என
அழைக்கப்படும் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் போன மாதம் கோவைக்கு வந்திருந்தார்.அவரின்
உடன்பிறப்புகளும் வந்திருந்தனர். ஆபிசர் பார்க்க இளைஞனாக இருக்கிறார்.(ஹேர்டை, டீ
ஷர்ட் போட்டு ஒரு யூத்தாகவே இருக்கிறார் இன்னும் )அவரை அழைத்துக்கொண்டு ப்ரூக்
பீல்ட்ஸ் மால் சென்றேன். அம்மணிகளின் வருகை குறைவாக இருந்தாலும் அவர் மிக மகிழ்ச்சியாக
இருந்ததை கண்டு கொண்டேன்...அதற்குள் நண்பர் உலக சினிமா ரசிகனுக்கு ஒரு போன் போட
அவரும்.ஜோதியில் ஐக்கியமானார். இந்த சந்திப்பில் நிறைய விஷயங்களை பகிர்ந்து
கொண்டோம்.நன்றி பதிவுலகம்..
அது போலவே இன்னொரு திருநாளில்
பெங்களூரில் இருந்து நண்பர் கடல்பயணங்கள் சுரேஷ் கோவை வருவதாக சொல்லி
இருந்தார்.அவரை சந்திக்க ப்ளான் பண்ணியிருந்தோம்.ப்ரூக்பீல்ட்ஸ் மாலிற்கு முன்னதாகவே
ஆவியும் உலக சினிமா ரசிகனும் வந்திருக்க அவர்களுடன் கலந்து கொண்டேன்.சுரேஷ் வரும்வரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் கேஎஃப்சி யில் கூட்டம் பின்னி எடுக்க அங்கே நகர்ந்தோம்.கோவை
ஆவியின் கைங்கர்யத்தில் சிக்கன் பீஸ்களோடு அருகே இருந்த அம்மணிகளையும்
விழுங்கிகொண்டிருக்க சுரேஷ் வந்து விட்டதாக சொல்ல வாஸ்துக்காக அருகில் இருந்த
இட்லி கடைக்கு ஷிஃப்ட் ஆனோம்..சுரேஷ் பைஜாமா போட்டு சிக்கென வந்திருந்தார்.அவரிடம்
ஊர் ஞானம், உலக ஞானம் லாம் பேசிக்கொண்டே காபி குடித்தோம்.அதற்குள் எழில் மேடமும்
வர அனைவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நல்ல நண்பரை கொடுத்த
பதிவுலகத்திற்கு நன்றி.
*****************************
**************************
அதே மாதிரி இன்னொரு
சந்திப்பு....இதை படிக்க
உலகசினிமா ரசிகன், கவியாழி கண்ணதாசன், கோவை ஆவி மற்றும் நான்.
நிறைய நண்பர்களை கொடுக்கும் பதிவுலகிற்கு நன்றி
நேசங்களுடன்
ஜீவானந்தம்






























